பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 . திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை

குறட்பாக்களில் வைத்துள்ளார். அவை திருவள்ளுவரின் நோக்கக் கருத்துக்கள் அல்ல.

கன் எடுத்தக் ளப்படலாமா?

கட்குடி ஒரு பெருந்தீமை என்பது திருவள்ளுவர் கருத்து. பழந்தமிழரிடையே சிறிய கள் பெறினே எமக்கு ஈயுமன்ளே' என்று அவ்வையார் பாடும் அளவு கள் (அக் காலம் தேறல் என்னும் புளித்த தேன்) குடிக்கும் பழக்கம் இருந்தது. அதனைத் தீமையாக அதிலும் கடிய தீமை யாகக் கண்டித்த முதற் பெருமகனார் திருவள்ளுவரே. "கள்ளுண்ணாமை என்றொரு அதிகாரம் அமைத்து அதில் பத்துக் குறட்பாக்களால் கட்குடியைக் கண்டித்தார்.

களித்தறியேன்” (928) - கள்ளைக் குடித்துக் களி கொள்வதை அறிந்தேனல்லன் என்று சொல்லும் அள விலும் கட்குடியை நினைப்பது தீமை என்று பாடினார். இத்தகைய நினைக்கவும் தகாத கள்ளைத் திருவள்ளுவர் பிற இடங்களில் எடுத்தாண்டுள்ளமை தோக்கத்தக்கது.

காதலித்த இருவரது காதல் பற்றி செய்தி வெளிப் படுவது அலர் எனப்படும். அலர், பழி நூற்றுவதாகும். சில முனைகளில் இப்பழி துாற்றுவதும் காதலர்க்கு இனி மையைத் தரும். காதலனோடு தன்னைத் தொடர்பு படுத்திப் பேசுவதைக் கேட்பதில் காதலிக்கு ஒர் இனம் புரியா இனிமை எழும். காதலனுக்கும் அவ்வாறே. இத் தகைய இனிமையைத் திருவள்ளுவர் ஒர் உவமை கொண்டு விளக்கினார். . . . . .

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால், காமம்.

வெளிப்படுங் தோறும் இனிது’’ (1145)

1. அவ்வையார் புறம்: 235-1.