பக்கம்:திருவள்ளுவத்தில் பகுத்தறிவு முனை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.ே காவை. இளஞ்சேரன் - 39

காமம் வெளிப்படும்போதெல்லாம் ஓர் இனிய உணர்வு தோன்றுமாம். அந்த இனிமையை எவ்வாறு விளக்குவது? கள்ளை உண்டு களிக்கும்போதெல்லாம் அக்கள்ளை மேலும் மேலும் குடிக்கவேண்டும் என்னும் இனிய விருப்பம் தோன்றும். அது போன்ற இனிமை தருவது அலர் என்றார். என்றவர் எவர்? கள்ளை நினைத்தலும் தீமை என்று பாடிய திருவள்ளுவர்.

இஃது ஒன்று மட்டுமா?

தோழி ஒருத்தி காதல் தலைவன் ஒருவனைப் பார்த்து,

'அவளைப் பிரித்து நீ அவளுக்கு துன்பம் செய்தாய். செய்தாலும், காதல் திருடனே, உன் மார்பு அவளுக்கு நினைப்பிலும் களிப்பைத் தரு கிறது; கள்ளைக் குடித்துக் களித்தவர்க்கு அந்தக் சுள்ளைப் போன்று களிப்பைப் தருவதாகிறது. (1288)’ என்றாள்.

மேலும் மாற்று முறையாக,

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் .

கள்ளுக்கில் காமத்திற் குண்டு” - - (1281)

என்றும்,

'கள்ளினும் தீராக் களிமகிழ் செய்தலால்

கள்ளினும் காமம் இனிது’’ (1201) என்றும் பாடியுள்ளார். இவற்றால் திருவள்ளுவர் கட் குடியை ஒரு சிறப்பாக மதித்தார் என்றா கொள்வது? கூடாது. மற்றொன்றையும் காணவேண்டும்: