பக்கம்:திருவுந்தியார் திருக்களிற்றுப்படியார்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திருச்செந்திலாண்டவன் துணை


பதிப்புரை


ஆகமங்கள் எங்கே அறுசமயம் தானெங்கே
யோகங்கள் எங்கே உணர்வெங்கே - பாகத்து
அருள்வடிவும் தானுமாய் ஆண்டிலனேல் அந்தப்
பெருவடிவை யார்அறிவார் பேசு.


சைவ சமய குரவர்களாலும், அவர்களின் அருள்வழி வந்த அருளாளர்களாலும் திருமுறைகள், சைவசித்தாந்தப்பெரு நூல்கள், புராணங்கள், பிரபந்தங்கள் முதலியவை அருளிச் செய்யப் பெற்றுள்ளன. அவைகள் மெய்யுணர்வையும் பக்தி நலத்தையும் விளைவிப்பனவாய் அமைந்துள்ளன.

திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்து அதிபர் ஸ்ரீ-ல- ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் திருவருள் நோக்கத்தோடு திருமுறைகள், ஞானநூல்கள், ஸ்ரீ குமர குருபர சுவாமிகள் பிரபந்தங்கள் முதலானவற்றை வெளியிட்டு அடக்க விலையில் வழங்கி வருவதைத் தமிழ்ச் சைவ உலகம் நன்கு அறியும்.

திருவுந்தியாரும், திருக்களிற்றுப்படியாரும், பதினான்கு சாத்திர நூல்களில் உந்தி, களிறு என்று முன்னர் வைத்து எண்ணப்படும் சிறப்புடையன. இவ்விரண்டுநூல்களும், ஆட்கொண்டருள வரும் இறைவன் அருள்வடிவும் தானுமாய் அம்மையப்பனாய் வருமாறு போலப் பொருளால் ஒன்றாகி வடிவால் இருநூல்களாகத் திகழ்கின்றன. பருந்தும் நிழலும் போல உந்தியின் பொருளே தன் பொருளாகக் கொண்டு அதற்கோர் உரைநூலாகக் களிறு விளங்குகிறது. இவ்விருநூற்கும் பல உரைகள் எழுதப்பட்டிருப்பினும் இவ் விருநூல்களையும் ஒப்பிட்டு இரண்டும் ஒருபொருளன என்பதை விளக்கவில்லை. எனவே ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் இவ்விருநூற்கும் ஓர் ஒப்பீட்டுரை வெளிவர வேண்டும் எனத் திருவுளம் பற்றினர்கள். “இதனை இதனால் இவன்முடிக்கும்” என்னும்