பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் இலக்கியமுமாகும் 23 தமும், நயமும், புறனடை வழுவமைதிகளும் தருகிற இலக் கியக்களம் பொருளியற் பகுதியே ஆகும் எனலாம். மெய்ப்பாட்டியல்: தொல்காப்பியப் பொருளதிகாரம் இலக்கணம் மட்டுமில்லை, வாழ்க்கை நயங்களைச் சுட்டிக் காட்டும் ஒர் இலக்கிய நூலும் ஆகும் என்பதை விளக்க மெய்ப்பாட்டியல் பெரிதும் பயன்படுகிறது. மெய்ப்பாட் டியலை இலக்கியச் சுரங்கம்’-என்றே கூறலாம். மெய்ப் பாடுகளாகிய சுவைகள் எப்படித் தோன்றுகின்றன என்ப தையும், எவ்வெவற்றின் அடியாகத் தோன்றுகின்றன என் பதையும் நயம்படச் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் இயல் இது சுவைகள் இலக்கியத்துக்கு மிகமிக இன்றி யமையாதவை. அவை பண்ணைத் தோன்றும் இயல்பை யும், வகைப்படும் நிலைமையையும் அழகுறக் கூறுகிரு.ர். அல்லல்நீத்த உவகை என்று கூறிப் பிறர் துன்பங்கண்ட வழிப்பிறந்த உவகையைச் சான்ருேர் உவகை எனக் கொள்ள மாட்டார்கள்’ என்பதாகக் குறித்துரைப்பது ஆசிரியரின் இலக்கியப் பெருந்தன்மையைக் காட்டுகிறது. நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், வெகுளி, உவகை, பெருமிதம், என்ற எட்டு மெய்ப்பாடுகளையும் அவற்றின் வகைகளையும் ஆசிரியர் கூறும்போது இஃது ஒர் இலக்கண்மா வாழ்க்கை நூலா என்று நாம் வியப்பெய்த நேரிடுகிறது. கண்ணினும் செவியினும் துண்ணிதின் உணரும்'-என்னும் நூற்பாவோடு மெய்ப்பாட்டியலை முடிக்கும் போது சுவைக் களஞ்சியமாகிய இலக்கியப்பகுதி ஒன்றிற்கு முடிவுரை கூறி அமைப்பது போன்ற உணர் வையே அடைய முடிகறது. ஒவ்வொரு மெய்ப்பாடும் எப்போது எப்படித் தோன்றும் என்பதை விளக்கப் புகும் போது ஆசிரியர் இலக்கணம் போல வெறும் விதி விலக்குக் களை மட்டும் கூறி அமையாது மானிடத் தன்மைகளின் இயல்புகளையே ஆராய்ந்து கூறுகிருர் என்பது இங்கு உணர்ந்து இன்புறத்தக்கது. உவம இயல்: மெய்ப்பாட்டியல் அடுத்து உவம இயல்