பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - நா. பார்த்தசாரதி வருகிறது. இலக்கியத்தில் அழகுணர்ச்சி சார்ந்த பகுதி களே விளக்கும் இடங்களாக இவை வருகின்றன. இவ் விரண்டு இயல்களும் இலக்கியக் கலை இயல்கள் என்றே கூறத்தக்கவை. வினை, பயன், மெய், உரு, என இலக்கிய நயமறிந்து உவமவகைகளை வகுக்கும் ஆசிரியர், உயர்ந்த தன் மேற்று' என்று கூறும் போது மிக நுணுக்கமான இலக்கிய அழகு ஒன்றிற்கே அடிப்படை அமைக்கிரு.ர். சிறப்பு, நலன், காதல், வலி என்று மனித வாழ்க்கையின் நிலையான இலக்கிய அம்சங்களை உவமையோடு இணைத் துரைக்கிருர், பல்வேறு உவம வகைகளை வேறுபட வந்த உவமத் தோற்றம்’-எனச் சுருங்கக் கூறி விளங்க வைக்கும் திறன் பாராட்டற்பாலது. உருவகம், விளக்குவமை, போன்ற பலவகைகள் குறிப்பாக இங்கு கூறப்பட்டுவிடு கின்றன. இனிதுறுகிளவி, துனியுறுகிளவி, ஆகியவை. தலைவிக்கு உவமை கூறும் உரிமைகள், தோழிக்கு உரிமை, கிழவோற்குரிமை என்றெல்லாம் அகப்பொருட் பாத்திரங் களோடு தொடர்பு படுத்திக் கூறுவது ஆசிரியரின் இலக்கி யத்தன்மை மீதுள்ள ஈடுபாட்டைக் காட்டுவது ஆகும். செய்யுளியல்-மரபியல்: செய்யுளியலிலும், மரபியலி லும் இலக்கிய நோக்கிலேயே இலக்கியத்துக்குப் பயன் படும் நிலைகள் விளக்கப்படுகின்றன. அங்கதம் நோக்கு. பரிபாடல் முதலிய பலவற்றைச் செய்யுளியவில் விளக்கு கிரு.ர். மக்கள், மாக்கள், மரங்கள், உலகியற் பொருட்களுக் குரிய பெயர்களைக் கூர்ந்து கவனித்திருக்கும் ஆசிரியர் தொல்காப்பியர் அவற்றை மரபியலில் திறம்படத் தொகுத்துக் கூறுகிருர். மரபியல் ஓர் உயிரின வரலாறு போல் விளங்கும்படி படைக்கப்பட்டுள்ளது. - ஏன் இலக்கியமாகிறது?: பாடல் சான்ற புலனெறி வழக்கம், நாடக வழக்கம் என அமைத்து அகப் பொருட் பாத்திரங்களாகிய தலைவன், தலைவி, பாங்கன், பாங்கி, நற்.