பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருளதிகாரம் இலக்கியமுமாகும் 25 ருய், செவிலி, இருமுதுகுரவர், அறிவர், பரத்தை, பாணன் அகவன் மகள், முதலிய பாத்திரங்களை விளக்குதலும் அவர் கள் எங்கு எப்படி எப்போது பேசுவர் என வகைப்படுத்த லும், அழகியல் கூறுபாடுகளை விளக்குதலும், மக்கள் வாழ் வையே மையப் பொருளாக வைத்துப் பொருளதிகாரம் முழுமையாக இயற்றப்பட்டிருத்தலுமே அதனை ஒர் இலக் கிய நூலாக்குகிறது. இதுவெறும் இலக்கிய நூல் மட்டு மன்று புவியியல், பண்பாடு, மனித இன வரலாறு, விலங் கியல், அழகியல், ஆண், பெண் மனத்தத்துவங்கள், மானிட நுண்ணுணர்வுக் கருத்துக்கள், சுவை விளக்கங்கள் ஆகிய பல உட்பிரிவுகளைக் கொண்ட ஒரு பேரிலக்கிய நூலாகவும் விளங்கும் தகுதி தொல்காப்பியப் பொருளதி காரத்துக்கு உண்டு. எழுத்ததிகாரம் சொல்லதிகாரம் ஆகிய முன்னிரு அதிகாரங்களிலும் வெறும் இலக்கண ஆசி ரியராக மட்டும் விளங்குகிற ஆசிரியர் தொல்காப்பியர் பொருளதிகாரம் வரும் போது சகலகலா வல்லவராக விளங்குகிருர். அவருள் மறைந்திருக்கும் பல்துறைப் பேரறி வைப் பொருளதிகாரம் முழுமையும் பரக்கக் காண முடிகி றது. அந்த வகையில் பொருளதிகாரம் அனைத்துப் பொருள்களும் அடங்கிய அதிகாரமாகக் கற்போர்க்குப் பயன்பட்டுப் பெரிதும் இன்பம் பயக்கிறது.