பக்கம்:திறனாய்வுச் செல்வம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை திறய்ைவுச் செல்வம் என்னும் எனது இந்நூலில் என் னுடைய இலக்கியக் கட்டுரைகள் சில தொகுக்கப்பட்டுள் ளன. இக்கட்டுரைகள் பல்வேறு நேரங்களில் ஆய்வு நோக்குடன் எழுதப் பெற்றவை. இலக்கிய நயங் கானும் தரத்தின என்று இக்கட்டுரைகளைப் பற்றி உறுதி கூற முடியும். எடுத்துக் கொண்ட பொருள்கள் வேறு வேருக இருந்தாலும், இத்தொகுதியிலுள்ள கட்டுரைகள் அனைத் தும் தமிழ் மொழி வளர்ச்சி, அதன் மேன்மை குறித்தல், ஆகியவற்றைக் கருதும்போது ஒரே நோக்கமுடையவை. தமிழ் இலக்கிய மாணவர்களும், இலக்கிய ஆர்வலர்களும், வாசகர்களும் இவற்றைக் கற்பதால் சிந்தனை வளத்தையும், ஆராய்ச்சியறிவையும் பெற வாய்ப்பு உண்டு. இவற்றில் சில திறய்ைவுக் கலையோடும், ஆராய்ச்சியோடும் நெருக்க ம்ான-ஆழமான தொடர்புடையவை. மற்றும் சிவ இலக்கியப் பாத்திரங்களைத் திறய்ைபவை. வேறு சில மொழி ஆராய்ச்சி, நூலறிமுகம், வரலாற்று நோக்குக் கொண்டவை. பொதுக் கட்டுரைகளும் சில உள்ளன. இங்கு இவற்றை இப்போது நவபாரதி பிரசுரத்தார் நூல் வடிவில் கொண்டு வருகிருர்கள். அவர்களுக்கும் வாசகர்களுக்கும் என் மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறேன். * . . . . . . . . - பம் ، گ، سگ سـ ۔ 1ஃ 2-85 கா. பார்த்தசாரதி