பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:::இ- தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் என்னும் இலக்கணத்துட்பட்டு அடங்கின.1 இனி, அவற்றுள் வழக்குக்குஞ் செய்யுட்கும் பொதுவாகிய தனை இயற்கையளபெடையென்றுஞ் செய்யுட்குப் புலவர்செய்து கொண்டதனைச் செயற்கையளபெடை யென்றும் பெயரிட்டு வழங்கப்படும். அவ்விரண்டனுள்ளும் ஈண்டு, 'அளபெடை அசைநிலை யாகலும் உரித்” தெனப்பட்டது இயற்கை யளபெடையென்று பெயரிட்டு வழங் கப்படும். செயற்கையளபெடை சீர்நிலையாதல் செய்யுட்கே யுரியவாறுபோல இயற்கையளபெடை அசைநிலையாகலுஞ் செய்யுட்கே புரியதென்பது.? ஆகலுமுரித்தென்ற உம்மையான் அவையிரண்டானும் எவ்வாற்றானும் அசைநிலைப்படாது புணர்ச்சிவகையான் வந்த அளபெடைக்கண்ணும் பொருள்புலப்பாட்டிற்கு உரிய வாகச் செய்யுள் செய்யுமிடத்தும் அவ்வா றசைநிலையாக்கப் படுவதென்றவாறு, உதாரணம் : "பலாஅக்கோட்டுத் தீங்கனிமேற் பாய்ந்தாடு கடுவன்’ எனப் பலாஅக்கோ டென் புழிக், 'குறியதன் முன்னரு மோரெழுத்து மொழிக்கு மறியத் தோன்று மகரக் கிளவி (தொல் எழுத்-உயிர். 24) எனப் பெற்ற அகரமுண்டன்றே ? அதுவும் அளபெடையெனப்படும். அதனைப் பலாஅவென்புழிப் புளிமாவென்னுஞ் சீராக அலகு வை யாது நிரையசை நிலைமைத்தேயாக வைக்கப்படு மென்பது, 1. சீர்நிலையெய்திய அளபெடைகள் வழக்கிற்குஞ் செய்யுட்கும் பொது வாயினவும் செய்யுட்கேயுரியவாகிச் செய்யுள் செய்யும் புலவராற் செய்துகொள்ளப்பட்டனவும் என இருவகைப்படும். இவ்விருவகையளபெடைகளும் 'நீட்டம் வேண்டினவ்வளபுடைய கூட்டியெழுஉதல் என்னும் உயிரளபெடையிலக் கனத் துட்பட்டு அடங்குவனவாம். 2 . வழிக் குஞ் செய்யுட்கும் பொதுவாகிவரும் அளபெடை இயற்கையள பெடை யெனப்படும். செய்யுட் குப் புலவர் செய்துகொண்ட அளபெடை செயற்கையளபெடை எனப்படும். அவ்விரண்டினுள்ளும் அசைநிலையாகலும் உரித்தே' எனப்பட்டது. இயற்கையளபெடை எனப்பெயரிட்டு வழங்கப்படும். செயற்கையளபெடை சீர்நிலையாதல் செய்யுட்கேயுரியவாதல் போன்று இயற்கை அளபெடை அசைநிலையாதலும் செய்யுட்கேயுரியத ாகும்.