பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கசு 穹f鑫。 "நிலம்பாஅய்ப் பாஅய்ப் பட்டன்று நீலமா மென்றோட் கலம்போஒய்ப் போஒய்க் கெளவை தரும்' (யா. வி. ப. 45, 347, 417) என்புழிப், போஒய்ப் போஒயெனச் சேய்மைக்குறிப்புப்படச் செய்யுள் செய்தவழியும் அளபெடை அசைநிலையாயிற்று. இனி, இவற்றை விளியும் பண்டமாற்றும் நாவல் கூற்றும் முதலாயவற்றுள் வருமென்பாருமுளர். அங்ங்ணம் வந்தது பிற்காலத்துச் செய்யுவொன்ப. அல்லது உம் அங்ங்னம் வரையறைப்படாமையானும், நாம் முன்னர்க் காட்டினவை ஆண்டு அவற்றுள் அடங்காமையானும் அவ்வாறும் இகந்து கூறானென்பது உம் படும்.2 'உப்போஒ வெனவுரைத்து மீள்வா ளொளிமுறுவல்’ {யா. வி. ப. 42) எனப் பண்டமாற்றின்கண் வந்ததெனக் காட்டுப. பிறவும் இவ்வாறு வருவன அறிந்து அசைநிலைப்பாற்படுக்க என்றார்க்கு, இவை செய்யுளுள் தம்மோசை சிதையாவாயின் அலகிருக்கையுள் அழித்துப் பயந்ததென்னையெனின், அஃதன்றே இதனை எழுத்து நிலைப்படுமென்றற்குக் காரணமென்பது. அஃதேற், செய்யுளின் ஒசையை அழிக்கவமையும் பிறவெனின், அற்றன்று; அவ்வோசை யைச் செய்யுட்கண்ணே அழிப்பது சந்தியிலக்கணத்தின் வழி இயிற் றாம், இனிப் பிறவற்றுக்கண்ணும் அளபெடையைச் சிதைத்துச் சொல்லின் அச்செய்யுளுட் கருதிய பொருண்மை விளங்காதாம். 1. ஆகலும் உரித்து' என்ற உம்மை எதிர்மறையாதலின் அளபெடை எவ்விடத்தும் அசைநிலையாக்கப்படாது. பலாஅக் கோடு’ என்றாற்போன்று புணர்ச்சி வகையால் வந்த அளபெடையும் கலம்போஒய்ப்போஒய்க் கெளவை. தரும்’ எனச் சேய்மைக்குறிப்புப் புலப்படுமாறு பொருள் புலப்பாட்டிற்குரிய வகையில் வந்த அளபெடையும் அசைநிலையாகும் என்பதாம். 2. விளி, பண்டமாற்று, நாவல்கூற்று முதலியன அளபெடைக்குரிய மூவளயிசைத்தல் என்னும் ஒசைவரையறையினைக் கடந்தனவாதலானும் முன்னர்க்காட்டிய அளபெடைவகைகளுள் அவையடங்காமையானும் அவ்வாறு அளபெடை யோசையைக் கடந்து செய்யுள் செய்தலை ஆசிரியர் உடன்பட்டுரையார் என்பதாம். 3. 'உப்போஒ வெனவுரைத்து' என்பது பண்டமாற்றின்கண் வந்தது என்பார்க்கு இவை செய்யுளுள் தம்மோசை சிதையாவாயின் அசைநிலையாக அழித்துப்பயனில்லை. ஆகவே இவ்வளபெடை அசைநிலைப்பாற்படாது எழுத்துநிலைப்படுமென்றத்கு உதாரணமாயிற்று.