பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

邻们、 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் அது நோக்கிச் செய்யுளின்பத்தைச் சிதையாது ஈண்டு நாம் வேண்டப்பட்ட அலகிருக்கைக்கட் சிதைத்துக் கொள்க என்றா மென்டது.1 {35 6T} இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி. (இ - ள்.) எழுத்ததிகாரத்து 'நெட்டெழுத் தேழேயோ ரெழுத்தொரு மொழி' (மொழி கC) என்றதனாற் சொல்லாந்தன்மையெய்திய அளபெடை ஈண்டு ஈரசைச்சீர் கூறிய அதிகாரத்தானும் இயற்சீராந் தன்மையெய் திற்று, அதனையே எழுத்துநிலைமைப் படுத்து அசைநிலையும் வேண்டலின். அளபெடை.........முரித்தே எ து அளபெடை மேற்கூறிய இயற்சீர்நிலைமை பெறுதலேயன்றி ஒரசையாய் நிற்றலுமுரித்து எ று. உம்மையாற் சீர்நிலையாதலே வலியுடைத்து. நிலையென்ற தனால் எழுத்துநிலையும் நேர்ந்தார். அங்ங்னம் சீர்நிலை பெறுங்கால் முற்கூறிய ஈரசைச்சீர் பதினாறனுள் ஆசிரியவுரிச்சீ ராறும், போதுபூ விறகுதி என்னுமிரண்டியற்சீரும் ஒழித்து ஒழிந்த நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரை, நேர்நேர்பு, நேர்நிரைபு, நிரைநேர்பு, நிரைநிரைபு என்னும் இயற்சீர் எட்டுமாம் அங்ங்னமாதல் ஒருமொழியகத்தேயுடைய என்பது. ஆஅ எனத் தேமாவாயிற்று. கடாஅ எனப் புளிமாவாயிற்று. யாஅது என ஈரெழுத்து ஞாயிறு ஆயிற்று: என்னை? கடாஅ என்புழி அளபெடையது ஆகாரம் பிரித்துக் குறினெடிலாயினாற் போல (யகர)ஆகாரத்துப் பின்னின்ற அகரமுங் குற்றுகரமுங் குறிலிணை. யெனப்பட்டமையினென்பது. ஒழிந்தனவற்றிற்கும் இஃதொக்கும். 1 . அளபெடையோசை மிக்குவருமாயின் செய்யுளின் அவ்வோசையைக் குறைத்து விடலாமேயென்றால் அவ்வோசையைக்குறைப்பது புணர்ச்சியிலக்கனத்தின் வழுவியதாகும். பிறவிடங்களிலும் அளபெடையைச் சிதைத்துக்கூறின் செய்யுளுட்கருதிய பொருண்மை விளங்காது. அதுநோக்கியே செய்யுளின் இன்னோசையைச்சிதையாது அளபெடையை அலகிடும் நிலைமைக்கண் அசை நிலையாக்குக என்றார் தொல்காப்பியனார் என்பதாம். 2. யாஅது' என் புழி, யா' விற்குப் பின்னின்ற அளபெடை அகரமும் அதன்பின் நின்ற குற்றுகாமும் இணைந்து குறிலிணை எனப்பட்டமை யின் பா.அது' என்பது ஈரெழுத்து ஞாயிறு: ஆயிற்று.