பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எாங் ம் தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் (இ - ள்.) வஞ்சியுரிச்சீர் பிற பாக்களை ஆக்காதவாறு போலாது ஒழிந்த ஆசிரியவுரிச்சீரும் வெண்பாவுரிச்சீரும் இவ் வஞ்சிப்பாவினை யாக்கும் (எ று). உரிச்சீர் மேலதிகாரமாகலான், எஞ்சியட்வென இவ்விரண் டனையுமே கொண்டாமென்பது. வஞ்சியது பாவினை வஞ்சி யென்றான் ஆகுபெயரான், மற்றுச் சீர்கூறும்வழிப் பாக்கூறுவ தென்னையெனின் அப் பாவினை யாக்குவன சீராகலிற் சீரிலக் கணம் எய்துமென்பது.? அவை யாமாறு, "வசையில்புகழ் வயங்குவெண்மீன் றிசைதிரிந்து தெற்கேகினுந் தற்பாடிய தளியுணவின்' (பத்துப்-பட்டின. 1-3) எனத் தன்சீர்வரத் துரங்கலோசை பிறந்தது. "தாழ்தாழைத் தண்டண்டவை' (பத்துப்-பொருநர்-181) என்பதும், "புட்டேம்பப் புயன்மாறி' (பத்துப்-பட்டின-4) என்பதும் வெண்பாவுரிச்சீரால் துரங்கலோசை பிறந்தது. "புட்டேம்பப் புயன்மாறி” என்புழி, 'வசையில்புகழ் வயங்குவெண்மீன்' எனத் தனது சீரானே தூங்கலோசை பிறந்தாங்குப் பிறந்தது. 'திசைதிரிந்து தெற்கேகினும்” என இயற்சீர்நிற்பத் தன்சீரானே தூங்கலோசை பிறந்தது. "புள்ளுந்துயின்று புலம்புகூர்ந்து” என ஆசிரியவுரிச்சீரான் வஞ்சித்துரக்காயிற்று. பிறவும் அன்ன. (உ.உ) 1. உரிச்சீர் பற்றியது மேலதிகாரமாதலால் இங்கு வஞ்சியுரிச்சீரல்லாத எஞ்சிய சீர்களாவன ஆசிரியவுரிச்சீரும் வெண்பாவுரிச்சீரும் என இவ்விரண்டினையுமே எனக் கொண்டோம் என்றார் பேராசிரியர். 2. பா என்னும் உறுப்பினை ஆக்குவன சீர்கள். அத்தகைய சீரிலக்கணம் எய்துவன பாக்களாதலின் சீர்கூறும்வழிப் பாவினையும் சேர்த்தோதினார் ஆசிரியர்.