பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரை வளம் میسی سی T ، ங், கூ, மூவா றெழுத்தே கழிநெடிற் களவே ஈரெழுத்து மிகுதலும் இயல்பென மொழிப இளம்பூரணம் : என்-எனின். கழிநெடிலடி உணர்த்துதல் நுதலிற்று. (இ-ள்) பதினெட்டெழுத்து முதலாக இருபதெழுத்தளவுங் கழிநெடிலடியாம் என்றவாறு. எனவே, பதினெட்டும் பத்தொன்பதும் இருபதும் என மூன்று நிலம் பெறும். (ங்க) � t ■ ■ mr &#rf w muit : இவை ஐந்து சூத்திரமும் உரையியைபுநோக்கி உடனெழு தப்பட்டன. நாற்சீரடி இத்துணைப்பகுதிப்படுமென அவற்றது பெயரும் முறையுந் தொகையு முணர்த்துகின்றன. (இ - ள்.) நாலெழுத்து முதலாக ஆறெழுத்தளவும் வந்த நிலம் மூன்றுங் குறளடி யெனவும், ஏழெழுத்து முதன் மூன்று நிலனுஞ் சிந்தடியெனவும், பத்தெழுத்து முதல் ஐந்துநிலனும் அளவடியெனவும், பதினைந்தெழுத்துமுதன் மூன்றுநிலனும் நெடிலடியெனவும், பதினெட்டெழுத்துமுதல் இருபதெழுத்து வரை மூன்றுநிலனுங் கழிநெடிலடியெனவுஞ் சொல்லுட ஆசிரியர் (எ - று.): (இ-ஸ்) கழிநெடிலடிக்குரிய அளவு பதினெட்டெழுத்தாகும். அதன்மேல் (பத்தொன்பதெழுத்து, இருபதெழுத்து என இரண்டெழுத்து மிக்குவருதலும் அவ்வடிக்குரிய இயல்பாகும். எனவே, பதினெட்டெழுத்தும், பத்தொன்பதெழுத்தும், இருபதெழுத்தும் எனக் கழிநெடிலடி மூன்று நிலம் பெறும் என்பதாம். பா. வே. 1. செய்யுளியலுடையார், நாற்சீரடி தன்னையே நான்கெழுத்து முதல் ஆறெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் குறளடி யென்றும், ஏழெழுத்துமுதலா ஒன்ப தெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் சிந்தடியென்றும், பத்தெழுத்து முதலாப் பதினான்கெழுத்தின்காறும் உயர்ந்த ஐந்தடியும் அளவடியென்றும், பதினைந்து முதலாகப் பதினேழெழுத்தின் காறும் உயர்ந்த மூன்றடியும் நெடிலடியென்றும், பதினெட்டெழுத்து முதலா இருபத்தெழுத்தின்காறும் உயர்ந்த மூன்றடியும் கழிநெடிலடியென்றும், இருபத்தெழுத்தின் மிக்க நாற்சீரடிப்பா இல்லையென்றும் வேண்டுவர். அவ்வெழுத்தெண்னுகின்றுழிக் குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தமும் ஒற்றும் ஒழித்து நின்ற உயிரும் உயிர்மெய்யும் கூட்டி எண்ணப்பெறும் கா. வி. ப. என யாப்பருங்கலவிருத்தியுரையாசிரியர்