பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

య్ £_ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் மற்றிது முறையாயவாறென்னை யெனின், மாத்திரை எழுத் தினது குணமாதலானும் அசையுஞ் சீரும் அடியுந் துரக்கும் பாவும் வண்ணங்களுமென்று இன்னோரன்னவெல்லாம் மாத் திரை நிமித்தமாகத் தோன்றுவனவாதலானும் அது முன் (31.4) வைத்தான். அக்குணத்திற்குரிய எழுத்தினை அதன்பின் வைத் தான். அவ்வெழுத்தான் அசையும், (315) அசையாற் சீருஞ் (324) சீரான் அடியும், (346) அவ்வடி பெற்றவழி அதனை ஆக்கு மாறறியக் கூறும் யாப்பும் (390) அவ்வடியகத்தன சொல்லும் பொருளுமாகலான் அதன்பின் மரபும் (392) வைத்தான். அவ் வடியிரண்டினைத் தொடுக்குங்கால் அவற்றை ஒரடியென ஒரு தொடர்ப்படாமைத் துணிப்பது தாக்காகலான் (399) அதனைத் தொடைக்குமுன் (400) வைத்தான். அவ்வடியிரண்டு தொடுத்த வழியுங் கொள்ளப்படும் நோக்கென்பதறிவித்தற்கு (415) அதனைத் தொடைப்பின் வைத்தான். அவ்வடி இரண்டும் பலவுந் தொடர்ந்தவழி முழுவதுங் கிடப்பது பாவாகலான் அதனை அதன்பின் (417) வைத்தான். அப்பாத் துணிந்த துணிவினை (501) எண்ணுதலான் அளவினை (496) அதன்பின் வைத்தான். தினையுந் திணைக்குறுப்பாகிய (497) ஒழுகலாறும் அவ்வொழுக் கத்தவாகிய கூற்றும் (506) அதன்பின் வைத்தான். கேட்போருங் (508) கேட்கும் இடனும் (510) அதுபோலப் புலப்படாத காலமும் (514) இவற்றாற் பயனுமப் (515) பயனது பரத்துவரும்! காலம் பிற்பட்டுத் தோன்றிய காக்கைபாடினியம் என்ற நூலில் தமிழகத்தின் தென்னெல்லை கடலாகக் குறிக்கப்பட்டுள்ளமையால் இந்நூலாசிரியராகியகாக்கைபாடினியார் என்பவர் தமிழ் நாட்டின் தென்னெல்லை குமரியாறாக விளங்கிய தொல்காப்பியனார் காலத்தில் வாழ்ந்தவரல்லர் என்பதும் தமிழகத்தின் தென்திசையிலோடிய குமரியாறு கடலாற் கொள்ளப்பட்டுத் தமிழ்நாட்டின் தென்னெல்லை கடலாய் மாறிய பிற்காலத்தில் வாழ்ந்தவரென்பதும் நன்கு புலனாம். தொல்காப்பியனார் காலத்தில் வாழ்ந்த காக்கைபாடினியார் இயற்றிய காக்கைபாடினியத்தின் வேறாக ஒழிந்த காக்கைபாடினியம் என்னும் பிற்கால யாப்பிவக்கண நூலையியற்றிய காக்கைபாடினியார் என்பவர் தொல்காப்பியனாரோடு ஒருசாலைமானாக்கரல்லர் என்பது தமிழிலக்கிய வரலாற்றை து கொள்ள உள்ளவாறுணரவிரும்புவோர் எல்லோரும் இன்றியமையாது.ண வேண்டிய வரலாற்றுச் செய்தியென்பதனை வற்புறுத்தும் முறையில் பேராசிரியர் எழுதிய இவ்வுரை விளக்கம் அமைந்துள்ளமை கூர்ந்துணரத்தகுவதாகும். 1. பயனது பாத்துவரும் மெய்ப்பாடும் - பயனைச் சார்ட கக்கொண்டு தோன்றும் மெய்ப்பாடும். பாம்-சார்பு. பயன (துபாத்)து ப்ய) பு:கும். பா. வே.