பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鹽.密。 தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கூறிப் பயங்கோடுமாயினும் ஆண்டை முப்பத்து மூன்றெழுத்தின் வேறுபடப் பிறந்தன. சில வெழுத்துமல்லவென்பான், மேற்கிளந் தன்னவென்றானென்பது. மாத்திரையென்றொழியாது மாத் திரையளவுமென்றதனான் அம்மாத்திரையை விராய்ச்செய்யும் அளவை ஈண்டுக் கூறினானென்பது கருத்து. மற்று, எழுத்தியல் வகையினை மாட்டேற்றான் முப்பத்து மூன்றெனக் கொள்வ தன்றிப் பதினைந்தென்று கொள்ளுமாறென்னையெனின் எழுத்தோத்தினுட் குறிலுநெடிலும் உயிருமெய்யும் இனமூன்றுஞ் சார்பெழுத்து மூன்றுமெனப் பத்தும் இயல்புவகையான் ஆண்டுப் படுத்தோதினான், உயிர்மெய்யும் உயிரளபெடையுந் தத்தம் வகையாற் கூடுமாறும் ஐகாரம் ஒளகாரம் போலிவகையாற் கூடுமாறும் யாழ் நூலகத்து ஒற்றிசை நீளுமாறும் ஆண்டுத் தோற்றுவாய் செய்தான். செய்யவே, அவை ஈண்டுக்கூறும் எழுத்தியல் வகையோடொக்குமென்று உய்த்து உணர்ந்துகொள்ள வைத்தானென்பது. இவற்றோடு மகரக்குறுக்கமுங் கூட்டிப் பதினாறெழுத்து என்பாருமுளர். அதனாற் பயனென்னையெனின் பாட்டுடைத்தலைவன் கேட்டுக்குக் காரணமாமென்பர். மற்று உயிர்மெய்த் தொடக்கத்து ஐந்தனையும் மேல் எழுத்தென் றிலனாகலான் ஈண்டு எழுத்தியல்வகையுள் எழுத்தாக்கி அடக்கு மாறென்னையெனின், ஈண்டு அன்னவெனவே ஆண்டு இரண் டெழுத்தின் கூட்டமெனவும் மொழியெனவும் போலியெனவுங் கூறினானாயினும் அவற்றை எழுத்தியல் வகையெனப் பெயர் கொடுப்பவே ஆண்டு நின்ற வகையானே ஈண்டு எழுத்தெனப் படுமென்பதாயிற்று. 1. அளபெடையினை உயிரளபெடை ஒற்றளபெடை என இரண்டாகக் கொண்டு மகரக்குறுக்கத்தை எண்ணாது எழுத்துக்களைப் பதினைந்தாக இயற்றிக் கொள்ளுதல் தொல்காப்பிய மரபாகும். அளபெடையை ஒன்றாக எண்ணி மகரக் குறுக்கத்தைக் கூட்டிப் பதினைந்தாக எண்ணினார் யாப்பருங்கலவாசிரியர். எனினும், 'தனிநிலை யொற்றிவை தாமஸ் கிலவே அளபெடை யல்லாக் காலை யான' (யாப்பருங்கலம் சூ-3) என ஒற்றெளபெடுத்தலையும் அவ்வாசிரியர் உடன்பட்டுரைத்தலால் அவரும் அளபெடையினை உயிரளபெடை ஒற்றளபெடை என இரண்டாகப் பகுத்துக் கொண்டமை புலனாம். எனவே அசைக்குறுப்பாம் எழுத்துக்கள் உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில், உயிரளபெடை, ஒற்றளபெடை, வல்லெழுத்து, மெல்லெழுத்து, இடையெழுத்து, குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம், ஐகாரக்குறுக்கம், ஒளகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம் எனப்பதினாறாயின.