பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உ $ð– fB. இதன் கருத்து, இயலென்றதனான் இயற்றிக்கொள்ளும் வகையான் எழுத்து இனையதென்றானாம். வகை யென் பதனான் முப்பத்து மூன்றினைக் குறிலும் நெடிலுமென்றற் றொடக்கத்துப் பெயர் வேறுபாட்டாற் பத்துவகைப்பட இயற்று தலுங் கூட்டவகையா னிரண்டும் போலிவகையா னிரண்டும் யாழ் நூல்வேண்டும் வகையா னொன்றுமென ஐந்துவகையா னியற்றுதலுமென இரு வகையுங் கொள்ளப்படும். அல்லது உஞ் செய்யுட்கள் அவ்வெழுத்து வகையான் இன்னோசையவாக விராய்ச்செய்தலுங் கொள்க. மற்றளபெடையை மேல் மொழி யென்றான் ஈண்டெழுத்தென்றானாகலின் இதனை ஒரெழுத் தென்று கோடுமோ இரண்டெழுத்தென்று கோடுமொவெனின், 'நெட்டெழுத் திம்ப ரொத்தகுற் றெழுத்தே' (தொல்-எழுத்-மொழி. 8.) என்று கூறியவாற்றான் ஆண்டிரண்டெழுத்தெனக் கொள்ளக் கிடந்ததாயினும் முன்னர்ப் போக்கி, 'அளபெடை யசைநிலை யாகலு முரித்தே' (தொல்-செய், 17) என்றவழி எழுத்து நிலைமையும் எய்துவிக்குமாகலான் எதிரது நோக்கி ஈண்டு ஒரெழுத்தென்று கோடுமென்பது.? இனி அவற்றுட் குறிலும் நெடிலுங் குற்றுகரமும் அசைக்குறுப்பாம். மற்று, 1 . உயிர் பன்னிரண்டும் மெய்பதினெட்டும் சார்பெழுத்து மூன்றும் ஆக முப்பத்து மூன்றெழுத்துக்களையும் குறில், நெடில், உயிர், மெப், வலி, மெலி, இடை, குற்றியவிகரம், குற்றியலுகரம், ஆய்தம் எனப்பத்துவகையாகப்பகுத் துரைத்தல் இயல்பு வகையாற்கொள்ளப்படும் பகுப்பாகும். உயிர்மெய், உயிரள பெடை, என்னும் இரண்டும் எழுத்துக்களிரண்டு கூடிய கூட்டத்தினாற் பெற்ற பெயர். ஐகாரக் குறுக்கம், ஒளகாரக்குறுக்கம் என்பன இரண்டும் போலிவகையாற் கொள்ளப்பட்டன. ஒற்றிசை நீளுதல் ஒன்றும் இசைநூல் வேண்டுமாற்றான் கொள்ளப்பட்டது. எனவே இவையைந்தும் செயற்கைவகையால் இயற்றிக் கொள்ளப்படும் பகுப்பாகும். 2. உயிரளபெடையினை நெடிலும் குறிலும் ஆகிய இரண்டெழுத்தின் கூட்டம் என எழுத்ததிகாரத்திற்கொண்ட தொல்காப்பியனார், இவ்வியளிற் பின்னர் அளபெடை யசைதிலை யாகலும் உரித்தே' (செய். 17) என ஒரெழுத்தாம் நிலைமையினையும் எய்துவிக்கின்றாராதவின், எதிரது நோக்கி இவ்வியலில் உயிரளபெடையினை ஒரெழுத்து எனக் கொள்வோம் என்பர் பேராசிரியர். கொள்-தும்.கோடும் எனப்புணர்ந்தது. கோடும்-கொள்வோம்; தன்மைப் பன்மைவினைமுற்று.