பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/672

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா எாசு.சு ஆf கி முதனுாலாகிய அகத்தியம் என்னை? இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் என மூன்று பிண்டத்தினையும் அடக்கி நிற்றலின். ஆய்வுரை : இது, பிண்டம் ஆமாறு இதுவெனக் கூறுகின்றது. (இ-ஸ்) மேற்குறித்த சூத்திர்ம், ஒத்து. படலம் என்னும் மூன்று உறுப்புக்களையும் தன்னகத்தே உள்ளடக்கியதாய் வரு மாயின் அந்நூலினைப்பிண்டம் எனப் பெயரிட்டு வழங்குவர் புலவர் (எ-று.) தாம் கூறக்கருதிய பொருள் கேட்பார்க்கு எளிதிற் புலனாகச் சொல்லுதல் வல்ல புலமையுடையார் என்பார் தோன்று மொழிப் புலவர் என்றார். தொல்காப்பியம் என்னும் இயற்றமிழ்நூல் மூன்றுறுப்படக்கிய பிண்டம் எனப்படும். எழுத்து, சொல், பொருள் என்பன படலங்கள். நூல்மரபு முதல் மரபியல் ஈறாகவுள்ள இருபத்தேழும் ஒத்து என்னும் பெயரு டைய இயல்களாகும். அவற்றுள், எழுத்தெனப்படுப என்றாற் போல்வன சூத்திரங்களாகும் ள கண்கள் பாட்டிடை வைத்த குறிப்பி னானும் பாவின் றெழுந்த கிளவி யானும் பொருள்ம பில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும் என்று உரிைவகை இடையே நான் கென மொழிப. இளம்பூரண ம் : என். எனின், உரை பாகுபடுமாறு உணர்த்துதல் துதலிற்று. (இ. ஸ்.) பாட்டிடை வைத்த குறிப்பாவது-பாட்டினிடை வைக்கப்பட்ட பொருட்குறிப்பினானும் உரையாம் என்றவாறு. பலசொல் தொடர்ந்து பொருள்காட்டுவனவற்றுள் ஒசை தழிஇயவற்றைப் பாட்டென்றார். ஒசையின்றிச் செய்யுட் டன்மைத்தாய் வருவது நூலெனப்பட்டது.2 1. பொருளொடு புணராப்பொய்ம்மொழியானும் என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்ட பாடம். 2. ஒசை தழிஇ வருவன பாட்டென்றும் ஒசையின்றிச் செய்யுளின் தன்மை யாய் வருவது நூலென்றும், ஒசையும் செய்யுட்டன்மையுமின்றிவருவது உரை என்றும் இளம்பூரணர் தரும் இவ்விளக்கம் மிகவும் பொருத்தமுடையதாகும்,