பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என . ஆர்.ஆங் பாட்டெனவும் படாதாயிற்று. அதனான் இது அடிவரையறை: யின்றாயிற்று. ஆய்வுரை : இது, குறிப்புமொழி ஆமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) எழுத்தின் இயல்பினாலும் சொல்லின் தொடர்ச்சி யாலும் புலப்படாது, சொல்லினால் உணரப்படும் பொருட்குப் புறத்தே பொருளுடையதாய் வருவது குறிப்புமொழி என்பர் (எ-று ) "மேல் அங்கதமென்று சொல்லி ஈண்டுக் குறிப்புமொழி என்றதனான் இச்சொல் வசைகுறித்து வருமென்று கொள்க’ என்பர் இளம்பூரணர். “கவியாற் பொருள் தோன்றாது, பின்னர் இன்னது இது, எனக் குறிப்பினால் உய்த்துணர்ந்து சொல்ல வைத்தலின், இது குறிப்புமொழி எனப்பட்டது. பாட்டிடைப் பொருள் பிறிதாகி அதனிடையே குறித்துக்கொண்டு உணரினல்லது இக்குறிப்புப் புலனாகாதென்பார், இதனைக் கூற்றிடை வைத்த குறிப்பு' (செய்-158) என்றார். தொல்காப்பியனார். இதனைப் 'பொருளிசை என வழங்குவர் ஒருசாராசிரியர். 'குடத்தலையர் செவ்வாயிற் கொம்பெழுந்தார், கையின் அடக்கிய மூக்கின. ராம்' எனவரும். இதனுள் குடமே தலையாகப் பிறந்தார் எனவும். கொம்பெழுந்த வாயினர் எனவும், கையுட் கொண்ட மூக்கினர் எனவும் கூறியக்கால், எழுத்துஞ் சொல்லும் பொருளும் இயல் பிலவாதலும் குறிப்பினான் அதனைக் குஞ்சரம் எனக் கொண்ட வாறும் கண்டுகொள்க’ எனப் பேராசிரியர் காட்டிய உதாரண மும் விளக்கமும் ஈண்டுச் சித்திக்கத் தக்கனவாகும். இது பாட்டு வடிவிற்றாய் வருதலிற் பிசியெனலும் ஆகாது; குறித்த பொருளை நாட்டி நாற்சொல்லியலான் யாப்புவழிப் படாமையின் மரபழிந்து பிறவும் குறைதலிற் பாட்டெனவும் படாதாயிற்று அதனால் இது அடிவரையறையின்றாயிற்று” என்பர் நச்சினார்க்கினியர். 1. இவ்வுரை பேராசிரியர் உரையின் சுருக்கமாக அமைந்துள்ளது.