பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/695

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்ஆர்சி தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எனது. பாட்டிடைக் கலந்த பொருள் வங்கிப் பாட்டின் இயல பண்ணத் திய்யே # இனம்பூரணம் : என்-எனின். பண்ணத்தி யாமாறு உணர்த்துதல் நுதலிற்று. இன்.) மேல் இத்துணையும் பாவும் பாவின்றி வழங்கு வனவும் எடுத்தோதினார். இனிப் பிறநூலாசிரியர் விரித்துக் கூறின இசைநூலின் பாவின மாமாறு உணர்த்துதலின்இேது... பாட்டிடைக் கலந்த பொருளவாகி என்பது-பாட்டின்கட் கலந்த பொருளையுடைத்தாகி யென்றவாறு. எனவே, அவ்வடி பாவிற்குரிய பொருள் கொள்ளப்படும். பாட்டினியல பண்ணத்திய்யே என்பது-பாட்டுக்களின் இயல்பை யுடையவாம் பண்ணைத் தோற்றுவிக்குஞ் செய்யுட்கள் என்றவாறு. பண்ணைத் தோற்றுவித்தலாற் பண்ணத்தியென்றார்." அவையாவன சிற்றிசையும் பேரிசையு முதலாக இசைத் தமிழில் ஒதப்படுவன. அவையாமாறு வருகின்ற சூத்திரத்தாற் கூறுப. (கன் க.) 1. பண்னத்தி யியல்பே என்பது பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொண்டபாடம். 2. இங்குப் பிறநூலாசிரியர் என்றது. இயற்றமிழ் நூலாசிரிய ரல்லாத இசைத்தமிழ் நூலாசிரியரை. . இசைத்தமிழ் நூலார் கூறும் பண்ணத்தியென்றும் இசைப்பாடல்களையே பிற் கால யாப்பிலக்கண நூலாசிரியர்கள் நால்வகைப் பாக்களுக்கும் உரியவகையில் தாழிசை துறை விருத்தம் எனப் பர்வினமாகப் பகுத்துரைத்தனம் என்பார் ‘இனிப்பிறநூலாசிரியர் விரித்துக் கூறின இசைநூலின் பாவினமாமாறு உணர்த்து தலின்’ என்றார். 3. பண் நத்தி-பண்னத்தியென்றாயிற்று. நத்துதல்-விரும்புதல். பண்ணினை விரும்பிப் பாடப்பெற்ற இசைத்தமிழ்ச் செய்யுட்கள் என்பது பொருள். இயற்றமிழ்ப் பாடல்கள் அறமுதலாகிய மும்முதற்பொருட்கும் உரியவாதல் போலவே பண்ணத்தியும் பாட்டின்கண்கலந்த அம்முப்பொருள்களையே பொருளாகக் கொண்டு அமைவன என்பது புலப்படுத்துவார், பாட்டின் இயல’ என்றார். 4. இசைத்தமிழில் ஒதப்படும் சிற்றிசை பேரிசை என்பவற்றின் அமைப்பு இவையெனத் தெளிவாகப் புலனாகவில்லை.