பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/716

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா என அ கண்டு பாட்டிற் கூடுதலும், அது நிகழாவழியுங் கூட்டநிகழ்ந்து அவள் ஆயத்திடை நின்றவழியும் அவளருமையறிந்து பாங்கனை யுடம் படுத்திக் கூடுதலும் அவன் தோழியைப்போலக் கூட்டுந்தன்மையிலனாதலிற் றோழியாற் கூடுதலுமென முறைமை கூறினார். களவு இந்நான்கு பகுதியானு மடங்கும். உ-ம். 'கோட லெதிர்முகைப் பசுவீ முல்லை’ (குறுந்தொகை க உ) இது இயற்கைப்புணர்ச்சி நிகழ்ந்தது. 'உறுதோறுயிர் ... ... தோள்’ (திருக்குறள்-ககoகr) 'சொல்விற் செல்வெதிர் கொள்ளாய்” (நற்றிணை - கூ) வேட்ட பொழுதின ... ... டோள்' (திருக்குறள்-க கரு) இவை களவியலிற்கண்டுகொள்க. ஆய்வுரை : இது களவும் கற்பும் என முன் வகைப்படுத்திய கைகோள் இரண்டனுள் களவாமாறு உணர்த்துகின்றது. (இ-ள்) காமப்புணர்ச்சி (இயற்கைப் புணர்ச்சி), இடந். தலைப்பாடு, பாங்கற்கூட்டம், தோழியிற் கூட்டம் எனச் சொல்லப்பட்ட அந்நான்கு வகையாலும் அவற்றைச் சார்ந்துவரும் கிளவியாலும் வருவன களவென்னும் கைகோள் எனக் கூறுதல் மறையுணர்ந்தோர் நெறியாகும் என்று. தினையொழுக்க வகையாகிய களவு, கற்பு என்னும் இப்பாகுபாட்டினை யுனரும் முறையிற் செய்யுள் செய்தல் கைகோள் என்னும் செய்யுளுறுப்பாகும். கைகோள் களவும் கற்புமாகிய ஒழுகலாறு.