பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/723

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ః శ్రీ. தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் கைகோளென்பது, ஒழுக்கங்கோடல்; எனவே, அகத்திற்குப் புறனாயினும் புறத்திணைக்குக் கைகோள் அவ்வாறு வேறு வகைப்படக் கூறப்படா; பொதுவகையானே மறைந்த ஒழுக்கமும் வெளிப்பாடுமென இரண்டாகி அடங்கும் அவை:பு மென்றவாறு. அவை வெட்சியுள்ளும் ஒழிந்த திணையுள்ளுங் காட்டப்பட்டன. ( بھی ہوئے 45) நச்சின ஈர்த்திரிையம் : இது புறத்திணைக் கைகோள் கூறுகின்றது. (இ-ள்). மெய்பெறக் கைகோள் வகை யவையே எ-து பொருள் பெறவரும் கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே.2 எ- று. எனவே அகத்திற்குப் புறனாயினும் புறத்திணைக் கைகோள் அவ்வாறு வேறுவகைப்படக் கூறப்படா பொதுவகையானே மறைந்த வொழுக்கமும் வெளிப்பாடும் என இரண்டாய் அடங்கும். அவை எறு. அவை வெட்சித் திணையுள்ளும், ஒழிந்த திணையுள்ளுங் காண்க. 1. புறத்தினை அகத்திற்குப் புறனாயினும் அவற்றுக்குக் கைகோள் வகைப் பட வேறு கூறப்படுதல் இல்லை. மறைந்த வொழுக்கம் வெட்சியெனவும் வெளிப்படு செயல் ஒழிந்த திணைகள் எனவும் இரண்டாகி அடங்கும்.

  • மெய்பெறும் அவையே கைகோள் வகையே" எனவரும் சூத்திரத்தை, மெய்பெறும் கைகோள் வகை அவையே எனமொழிமாற்றிப் பொருள் கொண்டார் நச்சினார்க்கினியர். பொருள்பெறவரும்’ என்னும் உரைப்பகுதியைக் கூர்ந்து நோக்குங்கால் மெய்பெறும் என இளம்பூரணர் கொண்ட பாடமே நச்சினார்க்கினியரும் கொண்டார் என்பது நன்கு புலனாகும். ஆயினும் இச்சூத்திரம் பேராசிரியர் கருதுமாறு புறத்திணைக் கைகோள் கூறுவதாகக் கொண்டு, 'பொருள் பெறவரும் கைகோட்பகுதி அகத்திணைக் கைகோளே' என உரைவரைந்துள்ளார். ஈண்டு அவை என்னும் சுட்டுப்பெயர் முற்கூறிய களவும் கற்பும் ஆகிய அகத்திணைக் கைகோளைச் சுட்டிநின்றது. களவு கற்பு என்னும் இருவகை யொழுகலாறுகளும் முறையே காமப்புணர்ச்சி இடந்தலைப்பாடு முதலிய வகைகளையும் பெற்று வகைபட வருவன அகத்திணைக் கைகோளே எனப் பிரிநிலையேகாரத்தாற் கூறவே, இவ்வகத்திணைகளின் புறனாகிய புறத்திணைக் கைகோள் இவ்வாறு பல வேறு வகைப்படக் கூறப்படா, பொதுவகையால் மறைந்த ஒழுகலாறும் வெளிப்பட்ட ஒழுகலாறும் என இரண்டாய் அடங்கும் எனப் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உய்த்துணர்ந்து பொருள் கூறியுள் ளமை கற்போர் மனங்கொளத் தகுவதாகும்.