பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/785

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీన్హెమిళ బ్రొ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் எச்சமும் மாட்டும் என்னாது மாட்டு முற்கூறியதென்னை யெனின் எச்சம் முதலாகிய ஐந்து உறுப்பும் இவ்விதி பெறு மென்று கோடற்கு எதிர் சென்று தழிஇயினானென்பது: (உ- ம்) 'வாரா ராயினும் வரினு மவர் நமக் கியாரா கியரோ தோழி நீர நீலப் பைம்போ துளரிப் புதல பிலி யொண்பொறிக் கருவிளை யாட்டி நுண்மு வீங்கைச் செவ்வரும் பூழ்த்த வண்ணத் துய்ம்மல ருதிரத் தண்ணென் நின்னா தெறிதரும் வாடையொடு: என்னா யினள்.கொ லென்னா தோரே' என்பது, எச்சமின்றி வந்தது. “தாமரை புரையுங் காமர் சேவடி’ (குறுந்: கடவுள் வாழ்த்து) என்பது, முன்னமின்றி வந்தது. 'மருந்தெனின் மருந்தே" (குறுந்: 71) என்பது, பொருளின்றி வந்தது. 'ஈயற்புற்றத் தீர்ம்புறத் திறுத்த” (அகம்: 8) என்பது, துற்ைவகையின்றி வந்தது. "யானே யிண்டையேனே" (குறுந்: 54) என்பது, மாட்டின்றி வந்தது. இடைநின்ற மூன்றினை இலேசி னாற்கொண்டு இரண்டினை2 எடுத்தோதினான். இவை இரண்டும் அவற்றதுதுணை இன்றியமையாச் சிறப்பினவல்ல என்றற் கென்பது. (உகக) தச்சினார்க்கினியம் : இது எய்தியதுவிலக்கிற்று. 1. செய்யுளியல் முதற்குத்திரத்துள் எண்ணியவாறு. முதற்கனுள்ள எக்சத்தை இங்கு முற்கூறாது இறுதியிலுள்ள மாடடு என்னும் உறுப்பை ஆசிரியர் முற்கூறியது இச்சூத்திர விதியினை முற்கூறிய எச்சம், முன்னம், பொருள். துறை. மாட்டு என்னும் ஐந்துதுப்பும் பெறும் என அறிவித்தற்பொருட்டாம் என்பர் பேராசிரியர், 2. இடைநின்ற மூன்றாவன: முன்னம், பொருள், துறை என்பன. இரண்டாவன் எச்சம், மாட்டு என்பன.