பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூ r á “மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாவருவாய்” என்பது, பதின்மூன்றெழுத்தடி, “மாசேர்வாய் மாவருவாய் மாசேர்வாய் மாவருவாய்” என்பது, பதினான் கெழுத்தடி; இவை மூன்றும், ع-تم ہوتی ہۂ 'அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய" (தொல்-செய். 58) என வெண்பாவிற்கு ஒதிய அளவடியேயாயினும் இக்காட்டிய அலகிடுகையாற் கலித்தளை தட்டுத் துள்ளலோசையும் பிறக்கும். “மாசேர்வாய் மாசேர்வாய் பாதிரி பாதிரி” எனவும், "மாசேர்வாய் பாதிரி பாதிரி காருருமு” எனவும், “மாசேர்வாய் பாதிரி காருகுமு காருருமு” எனவும், முன்காட்டிய மூன்றனையுமே இவ்வாறு அலகிட்டு ஒசையூட்டக் கலித்தளை தட்டாது வெண்பாவடியேயாம். இவ் விருகூறும் ஒசையொடு சேர்த்துணர்த்துக. பதினான்கெழுத்தின் இறந்த பதினைந்துநிலனும் பதி னாறுநிலனும் பதினேழு நிலனு மென இம்மூன்றும் வெண்சீர்வத் தொன்றியக்காலும் இயற்சீர்வத் தொன்றாக்காலும் ஒரு ஞான்றுஞ் செப்பலோசை பிறவா ; அவையும் ஒசையொடு சேர்த்தி வகுத்துணர்த்துக; அவை வருமாறு : 'புவிவருவாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாவருவாய்” எனவும், “மாவருவாய் மா வருவாய் மாவருவாய் மாவருவாய்” எனவும், "புலிவருவாய் மாவருவாய் மாவருவாய் மாவருவாய்' எனவும், இவை வெண்சீரொன்றியுங் கலித்தளை தட்டின; இனி இவற்றை இயற்சீர்கொடுத்துச் சொல்லுங்காலுஞ் செப்பலோசை சிதையும்; என்னை ? 'காருருமு காருருமு காருருமு பாதிரி' எனவும். 'காருருமு காருருமு காருருமு காருருமு” எனவும், 'நரையுருமு காருருமு காருருமு காருருமு” எனவும், இவை இயற்சீரான் வந்தும் வேறொரு சந்தப்பட்டுச் செப்பலோசை சிதையநிற்கு மென்பது, அசையுஞ் சீரும் இசை