பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮静令 தொல்காப்பியம் சாதிபற்றி வேறுபடாப் பொருளாகலின், ஊரும் பெயருமென்பன உறையூர் ஏணிச்சேரி முடமோசி, பெருங்குன்றுார்ப் பெருங் கெளசிகன், கடிவலு ருருத்திரங்கண்ணன் என்பன அந்தணர் க் குரியன; உறையூர்ச்சோழன், மதுரைப்பாண்டியன் என்பன அரசர்க்குரியன; காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணன் , மதுரை அறுவை வாணிகன் இளவேட்டன் என்பன வணிகர் க் குரியன; அம்பர்கிழான் நாகன், வல்லங்கிழான் மாறன் என்பன வேளாளர்க்குரியன. 'இனி, உடைத்தொழிற் கருவி'யென்பன, அந்தணாளர்க்குச் சுருவையுஞ் சமிதைகுறைக்குங் கருவியும் முதலாயின; அரசர்க்கு குடியும் கூழும் அமைச்சும் நட்பும் முதலாயின; வணிகர்க்கு நாவாயும் மணியும் மருந்தும்முதலாயின; வேளாளர்க்கு நாஞ்சிலுஞ் சகடமும் முதலாயின. பிறவும் அன்ன. அவையெல்லாம் அவரவர் செய்யுட் குரிய வென்பது. ஆய்வுரை : இது, மக்கள் எல்லோர்க்கும் சார்த்திக் கூறத்தக்கன யென் கின்றது. (இ-ள்) அவரவர் பிறந்த ஊரும், அவரவாக்குரிய இயற் பெயரும், அவரவர் மேற்கொண்ட தொழிலும், அத்தொழினுக் குரிய கருவியும் அவையவை எல்லா மக்களோடும் சார்த்திக் கூறப் படும் எ-று. இங்கு எடுத்துரைக்கப்பட்ட பொருள்கள் எல்லார் க்கும் ஒப்பச் சொல்லப்படும் என்பதாம். உதாரணம் பேராசிரிய ருரையிற் காண்க. (எடு) எசு. தலைமைக் குணச்சொலுந் தத்தமக் குரியதோர் நிலைமைக் கேற்ப நிகழ்த்துப என்ப. இளம்பூரணம் : (இ-ள்) தலைமைக் குணமுடையராகக் கூறுதலும் தத்தமக் கேற்ற நிலைமைக்குப் பொருந்துமாறு நிகழ்த்துப என்றவாறு. 1. தலைமைக் குணச்சொல் ஆவன மக்கட் பிரிவினர் தத்தம் தொழில் வகையாலும் பண்பினாலும் உயர்த்துக் கூறப்படும். புகழுரை. தத்தம் நிலைக்கேற்ப நிகழ்த்துதலாவது உலகிய `ು அவரவர்க்கு இயல்பாயமைந்துள்ள தகுதி நிலையிற் பிறழாதவாறு உயர்த்துப் புகழப்படுதல்.