பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் # 49 (இ-ள்) நுதலிய நெறியானன்றி வழிநூலென்றற்குச் சிறப்புடையது அம்முதனுால்வழிப் பிறந்த வழிநூல் (எ-று). அது தொல்காப்பியம். மற்றுப் பல்காப்பியம் முதலியன வோவெனின், அவை வழிநூலே, தொல்காப்பியத்தின்வழித் தோன்றின வென்பது; என்னை? 'கூறிய குன்றினு முதனூல் கூட்டித் தோமின் றுணர்த றொல்காப் பியன்ற னோனையிற் றமிழறிந் தோர்க்குக் கடனே' என்பவாகலானும், இவ்வாசிரியர் பல்காப்பியர், பல்காயனார் முதலாயினாரை அவ்வாறு கூறாராகலானுமென்பது; என்றார்க் குத், தொல்காப்பியங் கிடப்பப் பல்காப்பியனார் முதலியோர் நூல்செய்ததெற்றுக்கெனின், அவரும் அவர்செய்த எழுத்துஞ் சொல்லும் பொருளுமெல்லாஞ் செய்திலர்.செய்யுளிலக்கணம் அகத்தியத்துப் பரந்துகிடந்ததனை இவ்வாசிரியர்சுருங்கச் செய்தலின் அருமைநோக்கிப் பகுத்துக்கூறினாராகலானும் அவர் தந்திரத்துக்கேற்ப முதனுாலொடு பொருந்த நூல் செய்தா ராகலானும் அமையுமென்பது. பிற்காலத்துக் காக்கையாடினி யாருந் தொல்காப்பியரோடி பொருந்தவே நூல் செய்தா ரென்பது; மற்று,2 'வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகத் தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரியொடு கரைபொருது கிடந்த நாட்டியல் வழக்க நான்மையின் கடைக்கண் யாப்பின திலக்கண மறைகுவன் முறையே’ எனத் தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையாகிய காலத்துச் சிறு காக்கைபாடினியார் செய்த நூலினையும் அதன் வழிநூலென்னு 1. பல்காப்பியம் என்பது தொல்காப்பியத்தின் வழிநூல். தொல் காப்பியம் இருக்கவும் பல்காப்பியனார் நூல் செய்தது, செய்யு ளிலக்கணம் அகத்தியத்துப் பரந்து கிடந்ததனைத் தொல் காப்பியர் சுருங்சச் செய்தலின் அருமை நோக்கிப் பல் காப்பியனார் முதனூலொடு பொருந்தப்படுத்துக் கூறினார். 2. தொல்காப்பியர்க்கு இளையராக அவர் காலத்தையொட்டி வாழ்ந்த காக்கைபாடினியாரும் தொல்காப்பியர் கூறுமாற் றால் நூல் செய்தாராகலின் அவர் நூலினை வழிநூல் எனக் கூறுதல் தவறாகாது.