பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபி பல் ஆய்வுரை : இதுவும் அது. (இ-ள்) மேற்கூறப்பட்ட ஐந்தனுள் இளமைப் பெயர் கொள்ளுங்கால், நாயல்லாத ஏனை நான்கிற்கும் பிள்ளை என் னும் இளமைப் பெயர் கூறுதலும் அங்குத் தவறாகாது எ-று. கொள்ளுங்காலை நாய் அலங்கடை பிள்ளைப் பெயரும் ஆண்டுப் பிழைப்பு இல்லை, என இயையும். பிழைப்பு - குற்றம். அல் + கடை யெனற்பாலது அலங்கடை யென்றாயிற்று அலங் கடை - அல்லாத விடத்து. (க.க) கஉ. யாடுங் குதிரையும் நவ்வியும் உழையும் ஓடும் புல்வாய் உளப்பட மறியே இளம்பூரணம் : (இ - ள்) : என்றது யாடு முதலாகச் சொல்லப்பட்ட ஐந்துயிரும் மறி என்னும் இளமைப்பெயர் பெறும் என்றவாறு. நவ்வி - புள்ளிமான்.2 பேராசிரியம் : (இ-ன்) : இவ்வைந்து சாதியின் இளமைப் பெயர் மறி யெனப்படும் (எ-று). அெை1, மறித்துரூஉத் தொகுத்த பறிப்புற விடையன் (அகம்: 94) எனவும், " உள்ளில் வயிற்ற வெள்ளை வெண்மறி" (அகம் : 1.04) எனவும் யாட்டின்மேல் வந்தன. மறிக்குதிரையெனவும் மறி நூக்கிற்றெனவுஞ் சொல்லுதலின் இது குதிரைக்கும் உரித்தா யிற்று. நவ்வி நாண்மறி கவ்விக்கடன் கழிக்கும்” (குறுந் 282 எனவும், 1. விரைந்தோடும் இயல்புடையது மானின் இனமாகிய afi என்பது புலப்படுத்துவார். ஒடும் புல்வாய் என்றார். 2. நவ்வியென்பது புள்ளிமான், முழையென்பது முழா. உ.வே.