பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{} தொல்காய்யியல் ' மறியாடு மருங்கின் மடப்பினை யருத்தித் தெள்ளறல் தழeஇய .....” (அகம் : 34) எனவும், - - " தெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி' (குறுந்:213) எனவும் இவை, நல்வியும் உழையும் புல்வாயும் முறையானே மறியென்னும் பெயர் எய்தியவாறு அல்வச்செய்யுளுட் கண்டு கொள்க. நல்வியும் உழையும் புல்வாயுள் அடங்குமன்றோ அவற்றை மூன்றாக ஒதியதென்னை? நாயென்றதுபோல அடங் காதோவெனின், மாவென்பது, குதிரையும் யானையும் புலியுஞ் சிங்கமும் முதலியவற்றுக்கெல்லாம் பெயராகலின் அவ்வாறு ஒதானென்பது. ஒடும் புல்வா'யென்றதனானே மடனடையன நவ்வியெனவும் இடைநிகரண உழையெனவுங் கொள்க. எட்டாம் முறைமைக்கண் ஒதிய மறியினை ஐந்தாம்வழிக் கூறிய வதனானே, - - செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி (குறுந் : 187) என்றது போல்வன கொள்க. ஆய்வுரை : (இ-ன்) ஆடு, குதிரை, நவ்வி, உழை, புல்வாய் எனக் கூறப்பட்ட ஐந்துயிர் வகைகளும் மறி என்னும் இளமைப் பெயர் பெறுவன எ-று. ‘உழை என்ற இடத்தில் முழை என்னும் பாடமும் 'முழா என்னும் பொருளும் இளம்பூரணருரையிற் காணப்படு கின்றன. உழை எனப்பாடங் கொண்டார் பேராசிரியர். ஒடும் புல்வாய்-துள்ளியோடும் இயல்புடைய புல்வாய் என்னும் மானினம். மடனுடையன நவ்வி எனவும் இடைநிகரன உழை 1. நாய் என்றுகூறிய அளவில் அதன் இனமாகிய நீர் நாய் முதலாயினவும் அடங்குமாறுபோல, நவ்வியும் உழையும் புல்வாய் என்ற இனத்துள் அடங்குமல்லவா? என்பது இங்கு எழும் வினா. புல்வாய் - மான், மா(ன்) என்பது குதிரையும் யானையும் புலியும் சிங்கமு முதலாயவற்றுக்கெல்லாம்(விலங்கு கட்கெல்லாம்) பெயராகலின் அவ்வாறு ஒதான் என்பது அதற் குரியவிடையாகும்.