பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

வெண்கோடுகழாலின் நீர்த்துறைபடியுமென்னும் அடைகூறி ஊர்க் குறுமாக்கள் போல்வாரைத் துன்னருங் கடாஅத்திற்குச் சொல்லா மையின் இதுவும் வேறுபட வந்த உவமத்தோற்றமெனப்பட்டது.

"முதிர்கோங்கின் முகையென முகஞ்செய்த குரும்பையெனப் பெயறுளி முகிழெனப் பெருத்த நின் னிள முலை' (கலி. 56)

என்றவழி, முதிர்கோங்கின் முகையும் முற்றிய குரும்பையையும்பெரியவாகலின் அவைபோலப் பெருத்த நின் இளமுலையென்றல் ஒத்தது, பெயறுளிமுகுளஞ் சிறிதாகவும் இவற்றோடு அதனை உடன் கூறி அப்பெயறுளி முகுளத்திற்கில்லாத பெருமைக்குணம் பொருட்குப் பின்னர் விதந்து கூறுதலின் அதுவும் வேறுபட வந்த உவமை யாயிற்று.

"மக்களே போல்வர் கயவ ரவரன்ன வொப் பாரி யாங்கண்டதில்’’ (குறள்.1071)

என்பது ஒவ்வாப்பொருளை ஒப்புமைகொண்டது. என்னை ? மக்களைக் கயவர் ஒவ்வாரென்னுங் கருத்தினான் மக்கள் போல்வர் கயவரென்றமையின் அதுவும் வேறுபட வந்த உவமையாற்று.

"தெடுந்தோட்டிரும்பனை நீர்நிழல் புரையக்

குறும் பல முரிந்த குன்றுசேர்சிறுநெறி’’

என்பதனுள், உவமையாகிய நிழல் பொருட்கெய்தியது உவமவினை யன்றே, அதற்கு நெடுந்தோடும் பெருமையும் அடையாகக் கூறி னான்; கூறவே, பனைநிழலோடொக்குங் குன்றஞ்சேர் சிறுநெறி முடிந்தவழிச் சென்றுபுகும் ஊர்க்குவமை நெடுந்தோடென்று கொள்ள வைத்தமையின் அதுவும் வேறுபடவந்த உவமையாயிற்று.

மண்படுதோட் கிள்ளி மதவேழ மாற்றரசர் வெண்குடையைத் தேய்த்த வெகுளியால்-விண்படர்ந்து பாபுங்கொ லென்று பனிமதியுந் தன்னுருவந் தேயுந் தெளிவிசும்பி னின்று' (தண்டி-பா.58)

என்பதனுள், உவமானத்தினை உவமேயாக்கி அதனையே விலக் கினார். என்னை ? வெண்குடையென்று யானை குத்துமென்று மதியினைக் குடையுடனொப்பிப்பான் மதியினைக் குடையாகவே