பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல் - நூற்பா கடு 澄岛括、

கூறித் தேயுந்தெளிவிசும்பினின்று என்பதனாற் குடையோடு உவமை கூறியதை விலக்கினமையின் அதுவும் வேறுபடவந்த உவபத்தோற்றமாயிற்று.

'அகர முதல வெழுத்தெல்லாம் ஆதி

பக :ன் முதற்றே யுலகு’’

என்றவழி இரண்டு பொருள் வேறுவேறு கூறியதன்றி, அகர முதல எழுத்தெல்லாம் அதுபோல என்றானும், ஆதிபகவன் முதற்து உலகம் அதுபோல என்றானும் ஒன்றாகத் துணியுமாற் றான் உவமையும் பொருளுங் கூறாமையின் அதுவும் வேறுபட வந்த உவமமாயிற்று: பிறவும் அன்ன. இவை ஏனையுவமத்திற் கெல்லாம் பொதுவிலக்கணம். (്ല)

ஆய்வுரை

இஃது, உள்ளுறையுவமங்கூறுந்திறத்தின்கண் தலைவனுக் குரியதோர் மரபு உணர்த்துகின்றது.

(இன்) தலைமகனுக்காயின் (அவன்கூறும் உள்ளுறை இன்ன பொருட்கென்று) இடம் வரையறுக்கப்படுதல் இல்லை. எ-று.

எனவே தலைவன் கூறும் உள்ளுறை எப்பொருட்கண்ணும் பொருந்தி வரும் என்பதாம்.

இது, மேற்குறித்த இருவகையுவமங்களுள் ஒன்றாகிய ஏனை யுவமங்களுட் பல்வேறு மாற்றங்களையுடையனவாகக் காலந்தோறுங் கிளைத்துத் தோன்றும் உவமைப் பரப்பெல்லாம் அடங்கக்கொள்ளு மாறிதுவெனவுணர்த்துகின்றது.(இ-ள்)எடுத்தோதப்பட்ட இலக்கணங் களில் வேறுபாடுதோன்ற வந்த உவமப்பகுதிகளை அவ்வாறு வேறுபட வந்தனவேனும் மேற்கூறிய(ஏனையுவமம் உள்ளுறையுவமம்என்னும்) உவமப் பகுதியுடன் ஒப்புநோக்கி அமைத்துக்கொள்ளும் இடமறிந்து பொருந்தக்கொள்க. எ-று.

1. வெண்குடைக்கு உவமானமாகிய மதியினை உவைேயப் பொருளாக்கி அதனையே யானை குத்துமென்று விலக்கினார்.