பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா எா. :

யுள் உவமத்தினை வைத்துப் பின்பு எத்துணையுங்கடந்து மற்றோ ரடியுள் உவமேயத்தினைக் கூறி மொழி மாற்றிக் கொள்ளவைப்பின் அதுவும் உவமத்தாற் பொருள்புலப்படாது. எனவே சொல்லதிகாரத்திற்குறித்த நால்வகைப் பொருள்கோள்களுள் நிரனிறையொழிய ஏன்ைய சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் மூன்றும் உவமங் கூறுதற்கு ஒவ்வாதன என விலக்கப்பட்டன என்பார், கண்ணம் வரை நிலைவைத்த மூன்றலங்கடையே யென்றார். ஆசிரியர்,

வரை நிலைவைத்தலாவது உவமஞ்செய்தற்கு ஒவ்வாத பொருள்கோள் இவையென நீக்கிவைத்தல்.

"r: