பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்

பதிப்புரை

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஏழாவது இயலாக அமைந்தது உவமையியல் என்பதாகும். இதற்கு இளம்பூரணரும் பேராசிரியரும் எழுதிய உரைகள் இரண்டும் தமிழறிஞர்களாற் பயிலப்பெற்று வந்துள்ளன. இவ்வுரைகள் இரண்டும் இப் பதிப்பிற் சூத்திரந்தோறும் முறையே அமைக்கப்பெற்றன. இவ்வுரைகளைப் பயில்வார்க்குப் பயன்படும் வண்ணம் இன்றிமையாத உரைவிளக் கங்கள் அவ்வவ்வுரைகளின் கீழ் அடிக்குறிப்பாகத் தரப்பெற்றன. இவ்வுரைகளின் பின்னே தொல்காப்பிய மூலத்தை அடியொற்றிச் சூத்திரத்தின் கருத்தும் பொருளும் தெளிவாக விளங்க எளிய தமிழ் நடையில் எழுதப்பெற்ற ஆய்வுரைப் பகுதி சேர்க்கப் பெற்றுள்ளது. உரையாசிரியர்கள் காட்டிய உதாரணச் செய்யுட்கள் யாவும் சூத்திரப் பொருளையுள்ளவாறுணர்தற்குப் பயன்படும் இன்றியமையாத இலக்கியங்களாகத் திகழ்தலின், உரைகளில் உள்ள வண்ணமே முழுவுருவில் வெளியிடப் பெற்றுள்ளன. முன்னைய இயல்களின் உரைவ ளப் பதிப்புக்களைப் போலவே இவ்வியலின் உரைவளப் பதிப்பிலும் சூத்திர எண்களும் பக்க எண்களும் தமிழெண்களாகவே அச்சிடப்பெற்றன.

பதிப்புத்துறை

மதுரை காமர சர் பல்கலைக் கழகம்