பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா க.அ (泰·裘

வினை ஈண்டுப் பெயர்தந்து கூறி அதன் தொகையொடு படுப்பு இத்துணைப் பகுதியவாம் அந்நால்வகையுவமமும் என்றானென்பது.*

இதுவுமொரு கருத்து முன்னர் எவ்வெட்டாகக் கூறியவை ஒவ் வொன்றும் இரண்டு கூறாகி எட்டாம் பகுதியுடைய என்றவாறு." யாங்ங்ண மெனின் அன்ன என்னுஞ் சொன்முதலாகிய எட்டனுள் அன்ன ஆங்க மான என்ன எனப்பட்ட நான்கும் வேறொரு பொருளை உணர்த்தாமையின் ஓரினமாகி ஒன்றாகவும், விறப்ப உறழ தகைய நோக்க என்னும் நான்கும் ஒரு பொருளுடைமை யின் ஒரு பொருளாகவும். இவ்வாறே இன நோக்குதற் குறிப்பின வாயிற்று; இவ்வாற்றான் இரண்டெனவும்படும் எட்டுமென்றவாறு. இதனது பயன் இவ்விரண்டு கூற்றான் அடக்கப்படும் வினையுவமச் சொல் எட்டும் (287) என்றவாறு. விறத்தல், இனமாகச் செறியுமென்னும் பொருட்டு. உறழ்ச்சியுந் தன் இனமாகக் கொண்டு மாறுதற் பொருட்டேயாம். தகுதி அதுவெனப்படுவது என்னும் பொருண்மைத் தாகலின் அவற்றோடொக்கும். நோக்கென்பது உம் அவ்வாறே இன மாக்கி நோக்குதற்பொருட்டு இவ்வாற்றான் இரண்டெனவும் படும் எட்டுமென்றவாறு.8

1. சொல்லதிக ரத்தில் உவம வாய்பாடு விரிந்து வருமாறு கூறாது அறுவகைத் தொகைபற்றிய ஆராய்ச்சியில் உவமவுருபுதொக்கு வருமாறு உணர்த்தினார். அவ் வுவமவாய்பாடுகள் பொருளதிகாரமாகிய இவ்விடத்திற்குறிக்கப்படும் பல்வேறு குறிப்புப் பொருளுடையவை தலா னும் அவை இடைச்சொல்லாம் நிலையிலன்றிப் பொருள் பயப்பனவாக அமைந்துள்ளமையானும். அவ்வுவமவிரிவினை இப்க பொருளதிகாரத்திற்கூறி முற்சொல்லதிகாரத்திற்கூறப்பட்ட உவமத்துடன் தொகை யு டன் சேர்க்க வினை ப்யன் மெய் உரு என்றும் 'கால்வகையுவமும் விரியும் தொகையும் என இகுதிறப்பட்டு எட்டாம் பகுதியும் உண்டு என இச் சூத்திரத்தால் உவமை இத்துனைப் பகுதியவாம் எனத் தொல்காப்பியனார் தொகை கூறினார்

என்பதாம்.

2. காலிரண்டாகும் என்பதற்கு முன்னர் வினை முதலிய கால்வகையுவமை கட்கும் முறையே உரியவ: க எ வ்வெட் டாகத் தொகுத்துக் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதியும் கங்ான் காய் இரண்டு கூறாகி எட்டுப்பகுதிகளாதலும் உண்டு எனப் பொருள் கொள்ளுதலும் உண்டு என்பதாம்.

3. வினை யுவமவ ப்பாடுகள் எட்டினுள் அன்ன , ஆங்க, மான, என்ன

என்னும் கான்கும் இடைச்சொல்லாய் கின்று வேறொரு பொருளை யுணர்த்தாமை :பின் ஓரின மாய் ஒன்றாயின. விறப்ப, உறழ, தகைய கோக்க என்னும் நான்கும் இன கோக்குதற் குறிப்பின வாய்த் தமக்கென ஒரு பொருளுடைமையின் ஒளினமாய் ஒன்றாயின.