பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 கொடை எதிர்தல்-கொடுத்தலே மேற்கோடல். (உ-ம்) நாகர் பலி என்பது, நாகர்க்கு நேர்ந்த பலி என விரிதலேயன்றி நாகரது பலி என விரியினும் அமையும். நாகர்க் குக் கொடுத்தலே மேற்கொண்டவழி அங்ங்ணம் கொடுக்கநேர்ந்த பொருள் பிறர்க்காகாது நாகர்க்கு உடைமையா ம் ஆதலின் கிழமைப் பொருட்குரிய உருபாற் கூறினும் அமையும் என்றவாறு. ள. அச்சக் கிளவிக் கைந்து மிரண்டும் எச்ச மிலவே பொருள்வயி னன. இஃது ஐந்தாவதும் இரண்டாவதும் மயங்குமாறு கூறுகின்றது. (இ-ள்) வேற்றுமை தொக அவற்றின் பொருள் நின்றவழி, அச்சப் பொருண்மைக்கு ஐந்தாமுருபும் ஏழாமுருபும் ஒத்த வுரிமைய. எ-று. (உ-ம்) பழியஞ்சும் என்புழி பழியின் அஞ்சும், பழியை அஞ்சும் என இரண்டுருபும் ஒத்த கிழமையவாய் நிற்றல் அறிக. இவை ஏதுவும் செயப்படுபொருளுமாகிய வேறுபாடுடைய வேனும், ஈண்டு ஏதுவாதலே அஞ்சப்படுதலாய் வேறன்றி நிற்றலின், இவை அச்சப் பொருண்மையாகிய ஒரு பொருட் கண் வந்தனவாதலின் மயக்கமாம் என்பர் சேனவரையர். ளக. அன்ன பிறவுந் தொன் னெறி பிழையா துருபினும் பொருளினும் மெய் தடு மாறி இருவயி னிலேயும் வேற்றுமை யெல்லாம் திரிபிட னிலவே தெரியு மோர்க்கே. இது, வேற்றுமை மயக்கத்திற்குப் புறனடை, (இ-ள்) மேல் வேற்றுமை மயக்கங் கூறப்பட்ட வேற்று மையேயன்றி அவைபோல்வன பிறவும், தொன்று தொட்டு வரும் வழக்கிற் பிழையாது, உருபாலும் பொருளாலும் ஒன்றன் நிலைக்களத்து ஒன்று சென்று, பிறிதொன்றன் பொருளும் தன் பொருளுமாகிய ஈரிடத்தும் நிலைபெறும் வேற்றுமையெல்லாம் தெரிந்துணர்வோர்க்குப் பொருளால் திரிபுடையன அல்ல.எறு.