பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 உளடு. அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும் ஒருவர் மருங்கிற் படர் க்கைச் சொல்லே. இஃது உயர்திணைப் படர்க்கை வினைச்சொல் உணர்த்துகின்றது. (இ~ள்) அன், ஆன், அள், ஆள் என்னும் ஈற்றையுடைய நான்கு சொல்லும் உயர்திணை ஆணுெருமையும் பெண்ணுெரு மையும் உணர்த்தும் படர்க்கைச் சொல்லாம். எ-று. அன் ஆன் என்பன உயர்திணை ஆணுெருமையும், அள் ஆள் என்பன உயர்திணைப் பெண்ணுெருமையும் உணர்த்துவன வாகும். இவை நான்கீறும் மூன்று காலமும்பற்றி வரும். 'காலத்துக்கேற்ற எழுத்துப் பெறுங்கால், அன்னும் அள் ளும் அம்மீற்ருேடும், ஆனும் ஆளும் ஆமீற்ருேடும் ஒக்கும். அவ் வேறுபாடறிந்து ஒட்டிக்கொள்க’ என்பர் சேவைரையர். (உ-ம்) உண்டனன், உண்ணு நின்றனன், உண்பன் எனவும், உண்டான், உண்ணுநின்ருன், உண்பான் எனவும், உண்டனள், உண்ணுநின்றனள், உண்பள் எனவும், உண் டாள், உண்ணுநின்ருள், உண்பாள் எனவும் வரும். இச்சூத்திரப்பொருளே, 82.4. அன் ஆன் இறுமொழி ஆண்பாற் படர் க்கை. எனவும், 325. அள் ஆள் இறுமொழி பெண்பாற் படர்க்கை. எனவும் இரண்டு சூத்திரங்களாற் பகுத்தோதினர் நன்னூ லாசிரியர். உளகள். அர் ஆர் ப என வரூஉ மூன்றும் பல்லோர் மருங்கிற் படர்க்கைச் சொல்லே. இஃது உயர்திணைப் பன்மை வினேச்சொல் இவையென்பது உணர்த்துகின்றது.