பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 சொல்லியலுணர்த்தும் நூலுட் சொற்ருெகுதிகளே விரிக்கின் மற்ருென்று விரித்தலாம் எனக்கருதிய பவணந்திமுனிவர் சுருங்கச் சொல்லுதல் என்னும் முறையில் உரியியலில் சால: என்பது முதல் ஆர்ப்பு’ என்பது ஈருக நாற்பத்தைந்து உரிச் சொற்களையே யெடுத்தோதினர். இங்ங்ணம் சுருங்கச் சொல்லி யதனேக் குன்றக் கூறலாமென்பார் கருத்தைப் பரிகரித்தற்கு இச் சூத்திரத்தாற் புறனடை கூறினர். இங்கனம் கூறவே பெயரியலுட் பெயர்த் தொகுதியினையும், வினையியலுள் விஜனத் தொகுதியினையும் இடையியலுள் இடைத்தொகுதியினையும் விரி யாது அவ்விலக்கணங் காட்டுதற்கு வேண்டிய அளவே கூறுதற் கும் இதுவே புறனடையாம் என்பர் சிவஞானமுனிவர்.