பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 இப்பொருளே விரித்துக் கூறும் முறையில் அமைந்தது, 362: இரண்டு முதலா மிடையா றுருபும் வெளிப்பட லில்லது வேற்றுமைத் தொகையே. எனவரும் நன்னூற் சூத்திரமாகும். 'இரண்டாமுருபாகிய ஐ முதலாக வேற்றுமையுருபு ஆறும் இடையே தோன்ருது (அவற்றின் பொருள் தோன்ற) நிற்பது வேற்றுமைத் தொகையாம்? என்பது இதன் பொருள். ஆறுருபும் என்னும் முற்றும்மையை எச்சவும்மையாக்கி, பொற்குடம் என ஒரோவழி உருபும் பொருளும் உடன் தொக்க தூஉம் வேற்றுமைத் தொகையெனக் கொள்க’ என்பர் சிவ ஞான முனிவர். பொற்குடம்- பொன்ற்ை செய்த குடம் என விரியும். சகச. உவமத் தொகையே யுவம வியல. இஃது உவமத் தொகையாமாறு கூறுகின்றது. (இ-ஸ்) உவமத் தொகையாவது உவமவுருபுத் தொடர்ப் பொருள் போன்று பொருள் உணர்த்துவதாம். எ-று. எனவே அப்பொருள் உணர்த்தும் ஆற்றலில்லாதன தொகா என்பதாம். புலியன்ன சாத்தன், மயிலன்ன மாதர் என்னும் உவம வுருபுத் தொடர்களே உருபு தொகுத்துப் புலிச் சாத்தன், மயின் மாதர் எனத் தொகையாக்கின் உவமப் பொருள் இனிது விளங்காமையின், இங்ங்ணம் பொருள் விளக்கும் ஆற்றலில்லா தன தொகா; ஆற்றலுடையனவே தொகுவன என்பர் சேன வரையர். (உ-ம்.) புலிப் பாய்த்துள்; மழை வண்கை; துடி நடுவு, பொன்மேனி எனவரும். இத்தொகைச் சொற்கள் முறையே புலிப் பாய்த்துள் அன்ன பாய்த்துள்; மழையன்ன வண்கை; துடியன்ன நடுவு; பொன் னன்ன மேனி எனத் தம் விரியாக அமைந்த தொடர்களின் பொருளே உணர்த்தியவாறு காண்க.