பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

407 (இ ள்) பண்புச் சொல் தொக வரும் தொகையின் கண் னும் உம்மை தொக்க பெயர்க்கண்ணும் வேற்றுமை தொக்க பெயர்க்கண்ணும் இறுதிச் சொற்கண் நின்று நடப்பது அன் மொழித் தொகையாம். எ-று. 'பண்புத்தொகை படவும் உம்மைத்தொகை பிடவும் வேற்று மைத்தொகை படவும் அச்சொல் தொக்கபின்பு அத்தொகை அன்மொழித்தொகையாகாமையின், பண்புத்தொகை முதலியன வாக அச்சொற்கள் தொகுவதன்முன் அவற்றிற்கு நிலக்களனுகிய சொற்பற்றி வருவது அன்மொழித்தொகை என்பது விளக்குவார், 'பண்பு தொக வரூஉங் கிளவியானும் உம்மைதொக்க பெயர் வயினுைம், வேற்றுமைத்தொக்க பெயர் வயினுைம் என ஆசிரியர் விரித்துக்கூறினர் என்பர் சேவைரையர். நின்ற சொல்முன் வருஞ்சொல்லாகி வெளிப்பட நிற்பது அல்லாத மொழியொன்று, வேற்றுமைத்தொகை முதலிய தொகை நிலைத் தொடர்மொழிகளின் ஆற்றலால் அத்தொகை மொழிகளின் புறத்தே மறைந்து நிற்றலின் இத்தொகைக்கு அன்மொழித் தொகையென்பது பெயராயிற்று. இச் சூத்திரத்தின்கண் சிறப்புடைய வேற்றுமைத் தொகை யை முற்கூருத முறையன்றிக் கூற்றில்ை, சொல்லாதொழிந்த உவமத்தொகையும் வினைத்தொகையும் பற்றி அன்மொழித் தொகை தோன்றும் எனக்கொள்வார் இளம்பூரணர்.

  • வினேயின் ருெகையினும் உவமத் தொகையினும்

அன்மொழி தோன்றும் என்மனர் புலவர் : என்ருர் அவிநயனரும். இவ்வாறு தொல்காப்பியர் குறித்த பண்புத்தொகை, உம்மைத்தொகை, வேற்றுமைத்தொகை ஆகிய மூன்றுடன் உரையாசிரியர் குறித்த உவமத்தொகையும் வினைத்தொகையும் சேர்ந்த ஐவகைத் தொகைச் சொற்களின் புறத்தே அவையல் லாத பிறசொற்கள் மறைந்து நிற்க வருவது அன்மொழித் தொகையாம் என்பார், 368. ஐந்தொகை மொழிமேற் பிறதொகல் அன்மொழி. என்ருர் பவணந்தியார். 26