பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

433 (இ~ள்) இவை தொன்றுதொட்டு வந்தன அல்லவென்று கடியப்படுஞ் சொற்கள் இல்லை; அவ்வக்காலத்துத் தோன்றி நன்மக்கள் வழக்கினுள்ளும் செய்யுளுள்ளும் வழங்கப் பட்டு வருமாயின். எ-று. (உ-ம்) சம்பு, சள்ளே, சட்டி, சமழ்ப்பு எனவரும். இவை தொன்று தொட்டு வழங்கப்பட்டிருக்குமாயின் ‘சகரக்கிளவியும் அவற்றோற்றே, அ ஐ ஒளவெனு மூன்றலங்கடையே’ என ஆசிரியர் சூத்திரஞ் செய்யார். எனவே இச்சொற்கள் ஆசிரியர் காலத்திற்குப் பின்தோன்றிய பிற்காலச் சொல்லேயாம். ‘இனி, ஒன்றென முடித்தலாற் புதியன தோன்றிற்ை போலப் பழையன கெடுவனவும் உளவெனக்கொள்க. அவை அழான் முதலியனவும் எழுத்திற்புணர்ந்த (எழுத்ததிகாரத்தில் எடுத்தோதப்பட்ட) சொற்கள் இக்காலத்து வழக்கிழந்தனவும் ஆம் என்பர் சேவைரையர். இச்சூத்திரத்தினை அடியொற்றி யெழுந்ததே, 461. பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி ேைன. என நன்னூலின் இறுதியில் அமைந்த புறநடைச் சூத்திர மாகும். சடுக. குறைச் சொற்கிளவி குறைக்கும்வழி யறிதல். இது, செய்யுள் விகாரங் கூறுகின்றது. (இ~ள்) குறைக்குஞ் சொல்லேக் குறைக்குமிடமறிந்து குறைக்க. எ-று. 'குறைக்கும் வழியறிதல்’ என்றது, ஒரு சொற்கு முதல் இடை கடை என மூன்றிடத்தினும் இச்சொல் இன்ன இடத்துக் குறைக்கத் தக்கது என அறிந்து குறைக்க என்றவாறு. (உ-ம்) தாமரை என்பது மரையிதழ் புரையும் அஞ்செஞ் சீறடி என முதலிலும், ஓந்தி என்பது வேதின வெரிநின் ஓதி