பக்கம்:தொல்காப்பியம் நன்னூல்-சொல்லதிகாரம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 விளக்குவர் இளம்பூரணர். வழக்காற்றின் அல்ல’ என்ற தொடர் செய்யுளாறெனப் பேட்ட பண்புகொள் பெயர்கள் வழக்காற்றின் வாராதன, அல்ல, வருவனவே என்ற பொரு ளில் இங்கு ஆளப் பெற்றிருத்தலேயுளங் கொண்ட பவணந்தி முனிவர், 400. பொருண் முதலாரும் அடை சேர் மொழி, இனம் உள்ளவும் இல்லவுமாம் இரு வழக்கினும். எனச் சூத்திரஞ் செய்தார். பொருளாதி ஆறனையும் அடையாக அடுத்து வருமொழிகள் இனத்தைக் காட்டுவனவும் காட்டாதனவுமாம் வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் என்பது இதன் பொருளாகும். (உ.ம்) நெய்க்குடம், குளநெல், கார்த்திகைவிளக்கு, பூந்தோடு, செந்தாமரை, குறுங்கூலி எனப் பொருளாதி யாறும் ஆகிய அடைமொழிகள் வழக்கிடத்து இன முணர்த்தின; உப்பளம், ஊர்மன்று, கீழ்நோக்கிய கிணறு, மேல்நோக்கிய மரம், சிறுகாலே, கான்மாடு, செம்போத்து, தோய் தயிர் என வழக்கிடத்து இனமின்றி வந்தன. இவ்வாறே இவ்வடை மொழிகள் செய்யுளில் இனமுள்ளனவும் இல்லனவுமாக வருதலே உதாரணங்காட்டி விளக்கிய மயிலநாதர், இனச் சுட்டில்லாப் பண்பு கொள் பெயர்க்கொடை, வழக்காறல்ல செய்யுளாறே: (தொல்-கிளவி-18) என்பதல்ை இவை முடியுமாறு அறிந்து கொள்க: என இத்தொல்காப்பிய நூற்பாவுக்கு உரையாசி ரியர் கூறிய இப்; பொருளைச் சுட்டிக் கூறியுள்ளமை இங்குக் கருதியுணரத் தகுவதாகும். இனி, இனஞ்சுட்டி வரும் அடைமொழி அவ்விடத்திற்குப் பொருத்த முடைத்தாயின் இனமல்லதனையும் சுட்டுதல் உண்டு என்பதனே, 401. அடைமொழி யினமல் லதுந்தரு மாண்டுறின். எனவரும் நூற்பாவிற் பவணந்தி முனிவர் குறிப்பிடுவர்.