பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&& B: தொல்காப்பியம்-பொருளதிகாரம்-உரைவளம்

அகத்தோனுக்கும் அகத்தோனுக்குரியவாகச் சொல்லப்பட்ட துறைகள் புறத்தோனுக்கும் ஒப்பவுரியனவாக வழங்கிய பிற்கால மரபினை அடியொற்றித் தோன்றியது பெரும்பொருள் விளக்கம் என்னும் நூலாகும். இது நச்சினார்க்கினியர் உரையில் மட்டும் எடுத் துரைக்கப்படுகிறது. பிற்கால நூலாகிய இதன்கண் அமைந்த துறைகள் எல்லாவற்றையும் இந்நூற்குப் பன்னூறாண்டுகள் முற் பட்டுத் தோன்றிய தொல்காப்பியத்தில் அடக்குதல் இலக்கியங் கண்டதற்கு இலக்கணமியம்பல் என்னும் நச்சினார்க்கினியரது ஆர்வத்தின்பாற் படுமேயன்றி வரலாற்று முறைக்கு ஏற்புடைய தன்றாம் எனத் தெரிதல் வேண்டும்.

12. தும்பை தானே நெய்தலது புறனே

மைந்துபொரு ளாக வந்த வேந்தனைக் சென்றுதலை அழிக்குஞ் சிறப்பிற் றென்ப.

இளம்பூசணம்: இது, தும்பைத்தினை யாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ஸ்.) தும்பை நெய்தலது புறன் - தும்பை என்னும் திணை நெய்தல் என்னும் அகத்திணைக்குப் புறனாம், மைந்து பொருளாக வந்த வேந்தனை சென்று தலையழிக்கும் சிறப்பிற்று - அது வலி பொருளாகப் போர்கருதி வந்த அரசன்கண் சென்று அவனைத் தலையழிக்கும் சிறப்பினையுடைத்து.

இதனானே எதிருன்றல் காஞ்சி பிங்க. அதுபோக.கசஎச) என்பாரை மறுத்தவாறு அறிக. அதற்கு இது புறனாயவாறு என்னையெனின், இருபெருவேந்தரும் ஒருகளத்துப் பொருதலின்,

1. தலையழித் தல்-தலைமையினைச் சிதைத்தல்; வேந்தர் யாவரினும் உரித்தோன் யானே எனக் கருதும் செருக்கினை அழித்தல். மைந்து-வலிமை.

2. மைந்து பொருளாகவந்த வேந்தனை(எதிர்) சென்று தலைமை தீர்க்குஞ் சிறப்புடையது தும் பையென வே மைந்துபொருளாகப் படைகொண்டு மேற்சேறல் வஞ்சி எனவும், அங்ஙனம் தன் மேற் படைகொண்டு வரும் வஞ்சி எனவும், வேந் தனை எதிரேற்று அவனுடன் பொருதல், இருபெருவேந்தரும் ஒருகளத்துப் பொரு தலாகிய தும்பைத்திணையின் பாற்படும் எனவும் கொண்டு, இதனானே

எதிருன்றல் காஞ்சி' என்பாரை மறுத்தவாறு அறிக’’ என்றார் இளம் பூரணர்.

எஞ்சாமண்ணசை வேந்தனை வேந்தன் அடுதல் குறித்து வரும் மேற்செல வாகிய வஞ்சியும், மைந்துபொருளாக ஒரு களத்து எதிர் நின்று பொருதற்குச் செல் லுதலாகிய தும்பையும் நோக்கத்தாலும் போர் நிகழும் இடத்தாலும், வேறுபட்ட தனித்தனித் திணைகளாதலின் வஞ்சித்தினைக்கு எதிராய் எதிச் செல்வது தும்பைத்திணையுள் அடங்கும் எனக்கொள்ளும் இளம்பூரணர் கூற்று தொல்காப்பி யனார் கருத்துக்கு ஒத்ததாகத் தோன்றவில்லை.