பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல் நூற்பா டு நி எ

மா வரும் புகழ் ஏந்தும் பெருந் தானையர் - மா முதலியன வற்றால் தமக்கு வரும் புகழைத் தாங்கும் மூவேந்தருடைய பெரும் படையாளர்; உறு பகை வேந்திடை தெரிதல் வேண்டிப் போந்தை வேம்பே ஆர்என மலைந்த பூவும்-அப் புகழ்தான் உறும் பகையிடத்து இன்ன வேந்தன் படையாளர் வென்றார் என்பதற்கு ஓர் அறிகுறி வேண்டிப் போந்தை வேம்பு ஆரென்று கூறிச் சூடின. பூவும்;

இதன் கருத்து, ஏழகத்தகரும் யானையும் கோழியும் பூழும் வட்டும், வல்லுஞ் சொல்லும் முதலியவாற்றால் தமக்கு வரும் புகழைத் தாம் எய்து தற்குத் தத்தம் வேந்தர் அறியாமற் படைத் தலைவர் தம்முண் மாறாய் வென்று ஆடுங்கால் இன்ன அரசன் படையாளர் வென்றாரென்றற்கு அவரவர் பூச்சூடி ஆடுவர் என்ப தூஉம், அக் கூத்தும் வேத்தியற் கூத்தின் வழிஇயின கருங்கூத் தென்பது உம், அது தன்னுறு தொழிலென்பது உம் உணர்த்தி யதாம். இதனை இங்ங்னந் தன்னுறு தொழிலாக்காமல் வேந்துறு தொழிலாக்கின் அது தும்பையாம். புகழ்ந்து கூறிற்றெனிற் பாடாண்டிணையாம். ஆசிரியர் வெறிக்கூத்திற்கும் வள்ளிக் கூத்திற்கும் இடையே இதனை வைத்தார் இக் கருத்தானே யென் நுணர்க.

இவை தன்னுறுதொழிலாயவாறு காண்க.

வாடாவள்ளி-வாடுங் கொடியல்லாத வள்ளிக்கூத்தும்;

அஃது இழிந்தோர் காணுங் கூத்து.

இது பெண்பாற்குப் பெருவரவிற்று. இதனைப் பிற்கூறினார், வெறியறி சிறப்பன்மையானும் ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாவதல்லது அகத்திணைக்கண் வந்து பொதுவாகாமையும் பற்றி.

வயவர் ஏந்திய ஒடாக் கழனிலை உளப்பட-முன்பு கழல்கால் யாத்த வீரர் மழலைப் பருவத்தானொருவன் களத்திடை ஓடாது நின்றமை கண்டு அவனைப் புகழ்ந்து அவற்குக் கட்டிய கழனிலைக் சுத்து;

ஒடாமையாற் கட்டின கழல், ஏத்திய நிலையாற் கட்டின கழல். இது வள்ளிப்பின் வைத்தலின் இருபாலரும் ஆடுதல் கொள்க. கொடி முதலியன அவனை வியந்து கொடுத்தல் அத்துறைப் பகுதியாம்.

-5