பக்கம்:நபிகள் நாயக மான்மிய மஞ்சரி (கவிதைகள்).pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எவ்வளவு அருமையாகவும் அழுத்தமாகவும் உணர்த்தப்படுகின்றன! வாகைப்பூக்கள் குருதிப் பாசனத்தில் விளைபவை. ஆனால் குருதிக் கறைப்படாத வெற்றியோடு மக்க மாநகர் புகுகிறார் பெருமானார். என்ன தண்டனை கிடைக்குமோ என்று நடுங்கிக்கொண்டிருந்த இன்னாசெய்த பகைவர்களை மன்னிப்பு நன்னயம் செய்து ஒறுக்கிறார் பெருமானர். வரலாறு வியக்கும் இந்நிகழ்ச்சியைப் பாவலர் பாடுகிறார்:

மக்கங்க ரார்செய்த வல்வினைகள் யாதெனினும்
ஒக்கமறந் தேன்சகித்தேன் ஒன்றுமில்லை துன்பமினி
மிக்கமறு வோடுசுகம் மேவஉயிர் வாழஎனத்
தக்கஉரை தந்துகின்ற சாதுரியம் ஒரேமோ!

சாதுநபி நாயகமே சாதுரியம் ஒரேமோ!

பகைவரை மன்னித்தது வெறும் அறத்துப்பால் விஷயம் மட்டுமல்ல; பகைவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளும் பொருட்பால் விஷயமும் கூட என்பதைக் காட்டும் சொல்லல்லவா சாதுரியம்’ என்பது. நடந்ததும் அதுதானே. என்னே பாவலரின் சாதுரியச் சொல்லாட்சி!

பெருமானாரின் வாழ்க்கையைச் சரிவரக் கல்லாதோர் சிலர் அவர் பலரைத் திருமணம் புரிந்து கொண்டதைப் பற்றித் தம் அறியாமை வெளிப்பட முகம் சுளிப்பது கண்டு அவர்களுக்கு அறிவுறுத்துவதற்கென்றே பாடுவார் பாவலர் :

vii