பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

172



129. ஆண்டவன் அருளிய வெற்றி

உடன்படிக்கையையும், அபூ ஜந்தலின் பரிதாப நிலைமையையும் கண்ட ஹலரத் உமர் அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், பெருமானார் அவர்களிடம் சென்று “ஆண்டவனுடைய தூதரே! தாங்கள் உண்மையான நபி அல்லவா?” என்று கேட்டார்கள்.

“நிச்சயமாக, நான் உண்மையான நபியாயிருக்கின்றேன்” என்றார்கள் பெருமானார்.

“நாம் கடைப்பிடிப்பது நேர்மையான வழி அல்லவா?” என்று கேட்டார்கள்.

“ஆம்!”

“குறைஷிகள் கடைப்பிடிப்பது தவறான வழி அல்லவா?”

“ஆம்”

“இந்த நிலையில், மத சம்பந்தமான விஷயத்தில், நாம் எதற்காக நம்மைத் தாழ்வு படுத்திக் கொள்ள வேண்டும்?” என்று உமர் அவர்கள் கேட்டார்கள்.

அதற்குப் பெருமானார் அவர்கள், “நான் அல்லாஹவினுடைய தூதன். அவனுடைய கட்டளைக்கு மாறாக எதுவும் செய்ய முடியாது” என்று பதில் கூறினார்கள்.

அதைக் கேட்டதும் உமர் அவர்கள் மிகுந்த வருத்தத்தோடு, அபூபக்கர் அவர்களிடம் சென்று நிகழ்ந்தவற்றை விவரித்துக் கூறினார்கள்!

அப்பொழுது அபூபக்கர் அவர்கள், “பெருமானார் அவர்கள் ஆண்டவனுடைய நபி; அவர்கள் எதைச் செய்தாலும் ஆண்டவனுடைய கட்டளைப்படியே செய்வார்கள்” என்று சொன்னார்கள்.

அதன் பின்னர், பெருமானார் அவர்களிடம் மறுத்துப் பேசிய குற்றத்தை உமர் அவர்கள் நினைத்து, நினைத்துத் தங்கள் ஆயுள்