பக்கம்:நபிகள் நாயகம்-சரித்திர நிகழ்ச்சிகள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199



போர்க்களத்திலிருந்து செய்தி வருமுன்னே, பெருமானார் அவர்கள் நிகழ்ச்சிகளை அறிந்து, மதீனாவில் உள்ளோருக்கு அறிவித்தார்கள்.

பகைவர்களின் படை பலமோ, பன்மடங்கு பெரிது, ஆகையால், முஸ்லிம் படைக்கு மேலும் இழப்பு உண்டாகும் என்று கருதி, பகைவர்களைப் பின் தொடராமல் மதீனாவுக்குத் திரும்பி வந்து விட்டார்கள்.

இப்போரில், முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்த போதிலும், வெற்றியினால் பலன் எதுவும் கிட்டவில்லை.

படைகள் திரும்பி வந்ததும், ஒரு பக்கம் மகிழ்ச்சியும் ஒரு பக்கம் துன்பமாகவும் இருந்தது.

இளம் வயதினரான ஜஃபரின் மனைவியின் துக்கத்தையும், அவர்களுடைய ஆண் குழந்தையைக் கையில் எடுக்கும் போது உண்டாகும் துன்பத்தையும், பெருமானார் அவர்களால் தாள முடியவில்லை.

அதே போல் ஸைதின் பெண் குழந்தையைப் பார்த்தவுடன் பெருமானார் அவர்கள் அளவற்ற துயரம் அடைந்தார்கள்.


149. உடன்படிக்கைக்கு உடன்படாதவர்கள்

முஸ்லிம்களும், குறைஷிகளும் செய்து கொண்ட ஹுதைபிய்யா உடன்படிக்கையின் படி, தங்களுக்கு விருப்பமானவர்களுடன் கூட்டு உடன்படிக்கை செய்து கொள்ள உரிமை உண்டு என்ற நிபந்தனை இருந்தது. அதை அனுசரித்து குஸாஅ என்னும் கூட்டத்தார், முஸ்லிம்களுடன் கூட்டு உடன்படிக்கை செய்து கொண்டு, முஸ்லிம்களாகி விட்டனர். அதேபோல், பனூ பக்கர் என்னும் கூட்டத்தார் குறைஷிகளுடன் நட்பு உடன்படிக்கை செய்து கொண்டனர்.