பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரன் பெற்ற வாழ்த்து 19

அவற்றில் பாதியைத் தின்றுவிட்டு மிச்சத்தைச் சந்திரனுக்கே கொடுத்தாள். "நீ தான் அப்பா, நல்ல பிள்ளே' என்று அவனுக்கு முத்தம் கொடுத்தாள். மற்றவர்களேக் கண்டு அவளுக்குக் கோபம் உண்டாயிற்று. . - -

"நான் ஒருத்தி இருக்கிறேன் என்று நீங்கள் மூன்று பேரும் அடியோடு மறந்து வீட்டீர்களே ! உங்களை எப்படியெல்லாம் செல்லமாக வளர்த்தேன்! நீங்கள் இப்படிச் செய்ததற்குக் கடவுள் உங்களைச் சும்மா விடமாட்டார். நீங்கள் மூன்று பேரும் எனக்கு வஞ்சகம் செய்தமையால் உங்கள் மூன்று பேரையும் ஜனங்கள் வையட்டும். சந்திரனே எல்லாரும் . மகிழ்ச்சியுடன் ஏற்று வாழ்த்தட்டும்” என்று தாய் சொன்னுள். .

அதல்ைதான் சூரியன் அதிகமாகத் தகிக்கும் போது, "பாழும் சூரியன் எப்படிக் கொளுத்துகிருன்" என்று மக்கள் சொல்கிருர்கள். அப்படியே காற்றுப் புயலாக வீசினல், "இதென்ன பேய்க்காற்று. மோசமாக அடிக்கிறதே!” என்கிறர்கள். அதிக மழைபெய்தால், என்னட்ா இது? பேய் மழை யாக இருக்கிறதே! இந்தப் பாழும் மழை விடாதா?” என்று கடிந்து கொள்கிறர்கள்.

ஆல்ை சந்திரன் நிலா வீசும்போது குழந்தை

களும் முதியவர்களும் ஆண்களும் பெண்களும் மகிழ்கிருர்கள். (நாடோடிக் கதையைத் தழுவியது)