பக்கம்:நல்ல பிள்ளையார்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 நல்ல பிள்ளையார்

நரி முன்பு செய்தமாதிரி பாம்பின் வாயிலிருந்து முள்ளே எடுத்துவிட்டது.

அதற்குப் பிறகு நரி நண்டுகள் எல்லாவற்றை யும் உண்டு வந்தது. பாம்பு அந்தப் பக்கமே போக வில்லை. -

பத்து நாள் ஆயின. பாம்புக்கு இன்னும் நண்டுச் சபலம் போகவில்லே. பண்ணுகிறது தப்பு என்று ஒரு சமயம் நினேக்கும். அடுத்த கணம், இந்த நரிப்பயலுக்குப் பயப்பட வேணுமா ? என்ன செய்து விடுவான்? என்ற தைரியம் வரும், கடைசியில் நண்டுப் பட்சணத்தைச் சாப்பிடுவது என்று தீர்மானம் செய்து கொண்டது, அப்படியே அது நண்டுகளேத் தின்ன ஆரம்பித்தது.

நரி இதைப் பார்த்தது. இரண்டு முறை உபகாரம் செய்தது நரி, அது இல்லாவிட்டால் பாம்பு எவ்வளவோ சங்கடப்பட்டுப் போயிருக்கும். இரண்டு முறையும் பாம்பு வாக்குக் கொடுத்தது; ஆல்ை அதைக் காப்பாற்றவில்லை. முதல் முறை போனுல் போகிறது என்று எண்ணி, மறுபடியும் நரி உதவி செய்தது. இப்போது பழைய படியே தான் கொடுத்த வாக்குறுதியைப் பாம்பு காற்றில் பறக்க விட்டுவிட்டது, நரிக்குக் கோபம் கோபமாக வந்தது.

"என்ன அண்ணே மறுபடியும் இப்படி? என்று ஆத்திரத்துடன் கேட்டது. - - - -