பக்கம்:நல்வழி நயஉரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4.வான்மரபில் உதித்திட்ட மகளாம், மாதர்
மணியாகும் அன்னபூ ரணிதான் கொண்ட
தேன்பழனி சாமியென்னும் வாய்மை யாளன்,
திருவுளத்தின் பாங்கறிந்தே ஈன்றெ டுத்த
மான்.அனை தையனாயகி, பால சுப்ர
மணியனுக்கு மனைத்தக்க மாண்பா ளாகி;
தான்பிறந்த வீட்டுக்கோர் தத்தை நல்கும்
தருணமிது; தனிக்களிப்பு தவழும் நன்னாள்.


5.மணமேற்கும் முருகவேள் மதியில் மிக்கான்,
மங்கலமாய் அன்பரசி தன்னை வாழ்க்கைத்
துணையாக்கிப் புதுவாழ்வைத் தொடங்கும் நேரம்,
சுடர்விரிக்கும் மகிழ்ச்சிக்கோர் எல்லை உண்டோ?
குணமென்னும் புனலேறிக் குளிர்ந்த பொய்கைக்
கரையினிலே பூத்திட்ட கொள்கைப் பூக்கள்
இணைந்திங்கே இல்லறத்தைக் காணும் வேளை
என்வாழ்த்தைப் பொன்வாழ்த்தாய் இசைத்தேன் வாழ்க.


6.அன்புமனம் பொருந்தி,நலம் அனைத்தும் பெற்றே,
அழகான இல்லறத்தின் அருமை வென்றே,
இன்பமுடன் பேறெல்லாம் எய்தி என்றும்,
எழில்மரபின் புகழுக்கோர் அரணாய் நின்று,
தென்பொதிகைச் சந்தனம்போல் மணம்ப ரப்பத்
தெளிதமிழும் இனிமையும்போல் சேர்ந்து வாழ்ந்து,
நன்னெறிகள் விளைக்கின்ற கலைக்கூ டம்போல்
நலமோங்க வளமோங்க வாழ்க வாழ்க.


டாக்டர் ச. சவரிராஜன்

முன்னாள் உள்துறை அமைச்சர்

புதுவை மாநிலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நல்வழி_நயஉரை.pdf/7&oldid=1289816" இலிருந்து மீள்விக்கப்பட்டது