பக்கம்:நாகப்பட்டினம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 - - நாகபட்டினம்

கொள்ள இடமில்லை. முதற் செப்பேட்டில் மன்னர் பெயர்களைத் தந்து"இவை பட்டம் பதினாறும்" என்றுள்ளமை இன்னோர் சார்பில் பட்ட அலுவலர் ஆண்டதையே புலனாக்குகிறது. அடுத்த செப்பேட்டில் "இவர்கள் பிருதிவிராஜ்ய பரிபாலனம்" என்றுள்ளது. "பிரதிராச்ய" என்பதே "பிருதிவி" என்றுள்ளது. எனவே விசயநகர மன்னரின் பிரதி களான ஆளுநர் அல்லது சிற்றரசர் ஆண்டதாகவே கொள்ள வேண்டும்.

எனவே, பிற்காலச் சோழருக்குப் பின்னர் சோழ நாட்டை விச்ய நகரமன்னர் தம் கைக்குள் வைத்திருந்தனர்' என்றே கொள்ள வேண்டும். 4. முகமதியர் தலையீடு

இக்காலக்கட்டங்களில் பீசப்பூர் சுல்தான்களாகிய முகமதிய மன்னர் அவ்வப்போது தமிழக ஆட்சியில் தலையிட்டனர். ஆட்சியைப் பெறுவது அன்னோர் நோக்கமன்று. அவ்வப்போது கிடைக்கும் அளவில் பெருஞ்செல்வம் பெறுதலே நோக்கமாகும். அதற்குத் தம் படைத்தலைவர்களையோ சிற்றரசர்களையோ பயன் படுத்தினர். அவர்க்கு ஆட்பட்டோரும் இருந்தனர். தொடக்கத்தில் விசய நகர மன்னர் ஆட்படவில்லை; எதிர்க்கவும் செய்தனர். ஆனாலும், போகப்போக இயைந்தும் நின்றனர்.

இதனால் முகமதிய மன்னர் - அவருள்ளும் பீசப்பூர் சுல்தான்கள் പT്rങ്ങഖ சோழ நாட்டைக் கொத்திக் கொண்டேயிருந்தது.

விசயநகர மன்னரில் மேலோங்கியிருந்த கிருட்டிணதேவராயர் மதுரையில் அமர்ந்து பிற இடங்களில் தம் ஆளுநரை ஆட்சியில் அமர்த்தினார். சோழ நாட்டுத் தஞ்சையில் அவர்தம் ஆளுநராக நாயக்கர் இருந்தனர். கிருட்டிணதேவராயர் மறைவிற்குப்பின் அதாவது 1529-இன் பின் விசயநகரப் பேரரசு குலைந்தது. மதுரையில் திருமலை நாயக்கர் இடம் பெற்றார். 5. நாயக்கர் தஞ்சை (1540 - 1574)

தஞ்சையில் ஒரு நாயக்கர் அரசராக அமர்ந்தார். அவர் பெயர் சேவப்ப நாயக்கர். அவர் பெயர் செவ்வப்ப நாயக்கர், செல்வப்ப நாயக்கர், கேசவப்ப நாயக்கர் எனப் பலவாறாகக் குறிக்கப்படு கின்றது. இவர் நாயக்கர் இனத்திற்கென ஒரு வழிமுறையாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/100&oldid=584982" இலிருந்து மீள்விக்கப்பட்டது