பக்கம்:நாகப்பட்டினம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகரமைப்பு நாகை

அ. ஆற்றங்கரை நாகரிகம்

உலகத்தில் நகரமும் அதனோடு இயைந்த நாகரிகமும் ஆற்றங்கரையில் தோன்றின.

தமிழ் இலக்கிய, இலக்கண நூல்களும் இதனைத் தொன்மைக் காலத்தில் வரையறுத்துள்ளன. மாந்தன் மலையாம் குறிஞ்சியில் தோன்றினான். மலைமேல் நீர் சுரந்து ஊறி வரி வரியாக ஓடியது. ஒன்று கூடிய நீரோட்டம் அருவியாய் அடியில் விழுந்தது. நீரின் வரி ஒட்டத்தைக் கண்ட மாந்தன், அந்த ஒட்டத்தைக் கண்டவாறே வந்தான். விழுந்த அருவி கீழே ஆறாக ஓடுவதைக் கண்டான். அந்த நீரோட்ட வழியே வழியாக... நடந்தான். காடாம் முல்லையைக் கடந்தான். மருதமாம் ஆற்றங்கரையில் நிலத்தைக்கண்டு தங்கி, நிலத்தைச் செப்டம் செய்தான். கூடி வாழ்ந்ததில் ஊர் உருவாயிற்று. செப்பமான அமைப்பில் நகர் பிறந்தது. நகரின் ஒழுங்கும் முறையும் அழகும் அமைப்பும் கொண்ட பழக்க வழக்கம் நாகரிகத்தை உருவாக்கியது.

எனவே தமிழ் மண்தான் முதலில் ஆற்றங்கரை நாகரிகத்தை உருவாக்கியது.

ஆற்றங்கரை நாகரிகத்தையே உலகில் சிறப்பித்துச் சொல்லுவர். அகழ் ஆய்வாளரும், வரலாற்று ஆய்வாளரும் உலகத்தில் தோன்றிய ஆற்றங்கரை நாகரிகத்தைப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளனர்:

இந்தியா - சிந்து ஆற்றங்கரை நாகரிகம்; எகிப்து - நைல் ஆற்றங்கரை நாகரிகம்; மெசப்போட்டோமியா - டைக்கிரீசு ஆற்றங்கரை நாகரிகம்,

யுப்ரடீசு ஆற்றங்கரை நாகரிகம் இவை மூன்றுக்குள் குறிப்பிடத்தக்க தொன்மையும் சிறப்பும் கொண்டதாகச் சிந்தாற்று நாகரிகத்தையே குறிப்பிடுவர்.

ஆனால், அகழ்வு ஆய்வாளரும் வரலாற்று ஆய்வாளரும் ஒன்றைக் கணக்கில் எடுத்து ஆராய்ச்சியில் கொள்ளவில்லை. அதற்குக் காரணம் தக்க தடயங்கள் கடலுக்குள் இருந்தமையேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/142&oldid=585024" இலிருந்து மீள்விக்கப்பட்டது