பக்கம்:நாகப்பட்டினம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 நாகபட்டினம்

இவ்வாறு கொள்வதை ஒரு வழக்கு இடைமறிக்கிறது. அதுதான் சிந்தாற்றுத்துறைப் பிள்ளையார் கோயில் என்பது. பிள்ளையார் கோயில் தமிழ்நாட்டில் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்டரால் அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வாறாயின் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஆறு ஓடியதா என்று வினவலாம். அவ்வாறானால் தேவாரப் பாடலில் ஆறு இல்லாமை இதற்குத் தடையாகும்.

இந்த இடைமறிப்பை இவ்வாறு நீக்க வேண்டும்.

சிந்தாற்றுத் துறைகள்

ஆறு ஒன்று ஒடும்போது மக்கள் பயன்படுத்த நீரில் இறங்கும் வழி துறை எனப்படும். துறை என்பது வழியின் பெயர்தான். நீர்த்துறை அமைந்த இடமும் துறை எனப்படும். இவ்வகையில் ஆறு ஓடிய போது துறைபெயரைக் கொண்ட கரையின் இடம் ஆற்றின் போக்கு மாற்றப்பெற்ற பின்னரும் அப்பெயர்கொண்டு துறை எனப்படுவ துண்டு. இவ்வகையில் சிந்தாற்றுத்துறை என்று பெயர் கொண்ட இடத்தில் எழுப்பப்பெற்ற பிள்ளையார் கோயில் சிந்தாத்துறைப் பிள்ளையார் கோயில் என்று குறிக்கப்பட்டது.

இது போன்றே சிந்தாற்றின் கிழக்கெல்லையில் அமைந்த துறைமுகப் பகுதியில் பிற்காலத்தில் எழுப்பப்பட்ட கிறித்துவக் கோயிலும் சிந்தாற்றுத்துறைப் பெயர் கொண்ட இடத்தில் எழுந்த தால் சிந்தாத்துறை மாதா கோயில் எனப் பெற்றது.

எனவே, முற்காலத்தில் காவிரியாறு என்னும் நாகை நகர் நடுவே புகுந்து ஓடிய ஆறு பின் சிந்தாறு' என்னும் பெயர் கொண்டது.

நகர் நடுவே ஒடியபோது ஓடிய ஆற்று நீரை வேளாண்மைக்குப் பயன்படுத்திய மக்கள் ஆற்றங்கரையில் குடியமைப்பைக் கொண் டனர். ஊர் உருவாயிற்று. ஊர் வளம் பெற்று மக்கள் வளம் பெருகி வளமான இல்லங்களையும் அமைத்தனர். ஊர் பேரூர் ஆயிற்று. அப்பேரூர் நீர்ப்பெயற்று என்னும் பெயர் கொண்டது. இப்பேரூர் அமைப்பில் வடக்கில் புத்தத் துறவிகள் இலந்தைமர மேட்டு நிலத்தில் இடம் பெற்றனர் என்பதையும் இங்கு இணைத்து நகரமைப்பை மனக்கண்ணால் காணவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/150&oldid=585032" இலிருந்து மீள்விக்கப்பட்டது