பக்கம்:நாகப்பட்டினம்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகரமைப்பு நாகை 1 6 1

யானைகளைப் படைக்குரிய யானைகளாகக் கூட்டும் அளவில் இவ்விடம் இல்லை. முடுக்கு என்னும் சொல்லே இதனை அறிவிக்கிறது.

"முடங்கிய கோணந்தன்னை முடுக்கெனல் அடுக்கும்."(28) என்று மண்டலபுருடர் கூறுகின்றபடி ஒரு முக்கோணத்தில் முடியும் சிற்றிடம் முடுக்கு. இவ்விடம் பெருமாள் கோவிலுக்கு அண்மையில் உள்ளதால் இக்கோயிலுக்குரிய யானை கட்டி வைக்கப்பட்ட முடுக்கு ஆகும். இவ்வாறு எழுத்தாளர் நாகை ப. சிங்காரவேலன் சொல்கிறார். இஃது பொருந்தும். - -

இவ்வாறெல்லாம் நாகை தன் நகரளவிலும், சுற்றுச் சூழல் ஊரமைப்புகளிலும் ஒரு நிறைவு பெற்ற நகராக அமைந்தது. இதனைச் சேக்கிழார் பார்த்துள்ளார் எனலாம். சேக்கிழார் பெரியபுராணத்தை எழுதுவதற்குச் சுந்தரமுர்த்தியின் திருத் தொண்டர் தொகையை மூலமாகக் கொண்டார்.

உடனே ஒர் அறையில் அமர்ந்து எழுதத் துவங்கிவிடவில்லை. திருத்தொண்டர் தொடர்பான நகர்களையும் ஊர்களையும் இடங்களையும் நேரில் கண்டுள்ளார். இதனைப் பெரியபுராணப் பேரறிஞராகிய திரு. சி. கே. சுப்பிரணிய முதலியாரும் எழுதி யுள்ளார்.

பெரிய புராணத்தைப் பாடச் சேக்கிழார் நாகை நகரை வந்து கண்டிருப்பார். அவர் பார்வைக்கு நாகை எவ்வாறு காட்சியளித்தது?

"கோடி நீள்தனக் குடியுடன் குவலயங் காணும் ஆடி மண்டலம் போல்வதவ் வணிகிளர் மூதூர்" எனக் காட்சியளித்தது (29). உலகத்துப் பொருள்கள் பலவும் பரவி யிருக்கும் காட்சி உலகமே எதிரொளித்துக் காட்டும் நிலைக் கண்ணாடியாகத் தோன்றியதாம். சேக்கிழார் பாடிய உண்மைப் படப் பிடிப்பின்படி நாகை நகரம் உலகக் கண்ணாடியாயிற்று. தலைநகர் அமைப்பு

நிறை நகரமைப்பு பெற்ற நாகை அடுத்த 500 ஆண்டுக் காலத்தில் பெற்ற அமைப்பு ஒரு தனிக் காலக்கட்டமாகக் காண்பதற்குரியது. 14 -ஆம் நூற்றாண்டு முதல் 20-ஆம் நூற்றாண்டு வரை அஃதாவது இன்றுவரை ஒரு தனிக்கட்டம். இஃது ஐந்தாவது காலக்கட்டம்.

「らT.目2」。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/179&oldid=585060" இலிருந்து மீள்விக்கப்பட்டது